வீட்டுக்கொரு மூலிகைத் தோட்டம்... ஊருக்கொரு நாட்டு மருந்துக்கடை!

By காமதேனு

கே.சோபியா
readers@kamadenu.in

உலகின் மிகப்பெரிய தாவர ஆராய்ச்சி மற்றும் தாவரவியல் பூங்காவான லண்டன் `கியூ பார்க்'கைப் போலவே, நெல்லை மாவட்டம் பாபநாசத்திலும் `பொழில்' என்ற பெயரில் ஒரு மூலிகைப் பூங்கா உருவாகியிருக்கிறது.

தமிழகத்தின் குறிப்பாக மேற்குத்தொடர்ச்சி மலையில் உள்ள அத்தனை மூலிகைச் செடிகளும் இங்கே வளர்க்கப்படுகின்றன. இதை உருவாக்கி, பராமரித்து, ஒரு பல்கலைக்கழகம் போல நடத்திக்கொண்டிருக்கிறார் சித்த மருத்துவர் மைக்கேல் ஜெயராசு.
அவரை வெறுமனே சித்த மருத்துவர் என்று சொல்வது சரியாக இருக்காது. சுற்றுச்சூழல் ஆர்வலர், தமிழின் தொன்மங்களை ஆய்பவர், காடுகளுக்குப் பயணப்பட்டு மூலிகைகளைப் பரப்புபவர் என்று சொல்லிக்கொண்டே போகலாம். சித்த மருத்துவர் கு.சிவராமனின் ஆசானும் இவரே.

ஐந்தாறு ஆண்டுகளுக்கு முன்பு வரையில் பாபநாசம் செல்கிறவர்கள் எல்லாம் அந்தப் பகுதியை வேகமாகக் கடக்காவிட்டால் உயிரே போய்விடும் அளவுக்கு அவஸ்தைக்கு உள்ளாவார்கள். அவ்வளவு சுகாதாரக்கேடு. குறிப்பாக மனிதக்கழிவுகள். அந்த இடத்தைத்தான் சுத்தம் செய்து, மூலிகைத்தோட்டமாக்கி வைத்திருக்கிறார் மைக்கேல் ஜெயராசு. அவரது ஆர்வத்தைப் பார்த்து இடத்தை அவரது பராமரிப்பிலேயே ஒப்படைத்துவிட்டது இந்து சமய அறநிலையத்துறை. பாளையங்கோட்டையில் இருந்து மூலிகைதேடி அடிக்கடி பாபநாசம் வந்த இவர், இப்போது அங்கேயே தங்கிவிட்டார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE