இராக்கில் இன்னொரு யுத்தம்- ட்ரம்பின் அதிரடியால் புதிய சிக்கல்

By காமதேனு

சந்தனார்
readers@kamadenu.in

2019-ன் இறுதி நாட்களில், மத்தியக் கிழக்கு நாடுகளில் புதிய நெருப்பைப் பற்றவைத்திருக்கிறார் ட்ரம்ப். இராக்கிலும் சிரியாவிலும் இயங்கிவரும் ஷியா பிரிவு ஆயுதக் குழுவான கதாயிப் ஹெஸ்புல்லா அமைப்பின் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதலில் 25 பேர் கொல்லப்பட்ட சம்பவமும், அதைக் கண்டித்து கதாயிப் ஹெஸ்புல்லா உள்ளிட்ட பல்வேறு ஆயுதக் குழுக்கள் பாக்தாதில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தை முற்றுகையிட்டு நடத்திய போராட்டமும் ஆண்டின் கடைசியில் அதிர்வுகளைக் கிளப்பிவிட்டிருக்கின்றன.
கதாயிப் ஹெஸ்புல்லா ஈரானின் ஆதரவுபெற்ற அமைப்பு என்பதால், இந்த விவகாரம் பல்வேறு முனைகளில் பதற்றத்தை ஏற்படுத்தி
யிருக்கிறது. ஏற்கெனவே, முட்டி மோதிக்கொண்டிருக்கும் அமெரிக்காவும் ஈரானும் இராக் மண்ணில் பலப் பரீட்சையில் இறங்கி
யிருக்கின்றனவா என்று சர்வதேச ஊடகங்கள் அலசத் தொடங்கியிருக்கின்றன.

பழைய பகை

ஈரானுடனான அணு ஒப்பந்தத்திலிருந்து ட்ரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு, 2018-ல் அதிரடியாக வெளியேறியது. அத்
துடன் ஈரான் மீது ஏற்கெனவே கொண்டுவரப்பட்டு விலக்கிக்கொள்ளப்பட்ட பொருளாதாரத் தடைகள் மீண்டும் அந்நாட்டின் மீது விதிக்கப்பட்டன. இதனால், ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் பகை முற்றியிருக்கிறது. மத்திய கிழக்கில் அவ்வப்போது சின்னச் சின்ன மோதல்களும் இரண்டு நாடுகளுக்கும் இடையே நடந்துவருகின்றன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE