இந்தியா ஒன்றும் சத்திரம் கிடையாது!- எகிறுகிறார் எச்.ராஜா

By காமதேனு

கே.கே.மகேஷ்
magesh.kk@kamadenu.in

தலைமையில்லாத தமிழக பாஜகவில்  தடாலடியாக கருத்துச் சொல்லியே பிரபலமாக இருப்பவர் எச்.ராஜா. எதிர்க்கட்சித் தலைவர்களை கரடு முரடான வார்த்தைகளால் விமர்சித்து வரும் அவருடன் ஒரு பேட்டி.

குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு எதிரான திமுக தலைமையிலான பேரணியால் பெரிய கலவரம் மூளும் என்றீர்களே..?

அந்தப் பேரணியே மிகப்பெரிய தோல்வி. காரணம், காவல்துறையினர் தவிர வெறும்ஏழெட்டு ஆயிரம் பேர் கூட அதில் பங்கேற்க
வில்லை. திமுக மாத்திரமல்ல, திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட், வைகோ, திருமாவளவன், ஜவாஹிருல்லா என்று பல அமைப்புகள் எல்லாம் சேர்ந்து கூட்டியும் பத்தாயிரம் பேர் கூட திரட்டமுடியல. ஆக, குடியுரிமைச் சட்டம் பற்றிய திமுகவின் விமர்சனத்தை மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்பதை இந்தப் பேரணி நிரூபித்திருக்கிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE