ஆட்டோவுக்குப் பின்னால் அடடே வாசகம்!- செய்வன திருந்தச் செய்யும் செல்வராஜ்

By காமதேனு

வே.இசக்கி முத்து
esakkimuthu.v@hindutamil.co.in

திருநெல்வேலி டவுனை வட்டமடிக்கும் அந்த ஆட்டோவின் பின்புறம் இப்படியொரு வாசகம் - ‘யாருக்கும் உன்னைப் பிடிக்கவில்லை என்றால், நீ இன்னும் நடிக்கக் கற்றுக்கொள்ளவில்லை என்று அர்த்தம்'.

சக வாகன ஓட்டிகளை ஈர்க்கும் இந்த வாசகத்தை எழுதி வைத்த ஆட்டோ ஓட்டுநரின் பெயர் செல்வராஜ். இப்படி தினம் ஒரு தத்து
வத்தை எழுதி வைத்து அசத்துகிறார் செல்வராஜ். இவை அனைத்துமே பகவத் கீதையின் வரிகளும் சாய் பாபாவின் போதனைகளும் தான் என்பது அடுத்த சுவாரசியம்.

“எட்டாம் வகுப்புக்கு மேல படிப்பு ஏறாததால் படிப்புக்கு முழுக்குப் போட்டுட்டு சொந்தமா ஆட்டோ வாங்கி ஓட்ட ஆரம்பிச்சேன். அப்ப, சாய்பாபா பக்தரான ஒரு டாக்டர்தான் எனக்கு உறுதுணையா இருந்தார். ‘பாபாவின் பொன்மொழிகளை ஆட்டோவுக்குப் பின்னாடி எழுதிவைக்கலாமே’ என்று யோசனை சொன்னவர் அவர்தான். அப்ப தொடங்கி கடந்த 12 வருஷமா பாபாவின் போதனைகளையும் பகவத் கீதையில் இருக்கும் பொன்மொழிகளையும் ஆட்டோவுக்குப் பின்னாடி எழுதி வெச்சுட்டு வர்றேன்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE