இது அன்பால் கட்டிய கூடு!- நிர்கதியாக நின்ற தளிர்களுக்கு உதவிய உள்ளங்கள்

By காமதேனு

என்.சுவாமிநாதன்
swaminathan.n@kamadenu.in

பெற்றோரை இழந்து தவிக்கும் குழந்தைகளைச் சொந்தபந்தங்களே தள்ளிநின்று வேடிக்கை பார்க்கும் காலம் இது. ஆனால், மனிதம் இன்னும் மரித்துவிடவில்லை என்று நிரூபிக்கும் வகையில், நிர்கதியாக நின்ற மனோஜுக்கும் ஜோதிக்கும் அழகான வீட்டைக் கட்டிக்கொடுத்து ஆச்சரியத்தில் ஆழ்த்தியிருக்கின்றனர் இவர்கள் கல்வி பயிலும் பள்ளியின் ஆசிரியர்களும், மாணவர்களும்!

தமிழக - கேரள எல்லையோரப் பகுதியில் மீனச்சலை ஒட்டியிருக்கிறது மேலவீட்டுவிளை. அங்கே பெயின்ட் வாசனை வீசும் அந்தப் புத்தம் புதிய வீட்டிலிருந்து ஸ்கூல் பேக்கை  தோளில்  போட்டபடி  கைகோத்துக்  கிளம்புகிறார்கள் மனோஜும் ஜோதியும். கன்னியாகுமரி மாவட்டம், திருத்துவபுரம் புனித ஜோசப் மேல்நிலைப் பள்ளியில் மனோஜ் ஒன்பதாம் வகுப்பும், ஜோதி எட்டாம் வகுப்பும் படிக்கிறார்கள்.

கூலி வேலை செய்துவந்த மனோஜின் அப்பா ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு தற்கொலை செய்துகொண்டார். அம்மா, சுலோச்சனா புற்றுநோயால் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு இறந்துபோனார். அதன் பின்னர் இந்தச் சிறார்களின் வாழ்க்கையில் இருள் சூழ்ந்தது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE