கற்ற கலையும் பட்ட உழைப்பும் தந்த வெற்றி இது!- கொட்டாங்குச்சியில் கொடி நாட்டிய ராஜலட்சுமி

By காமதேனு

கா.சு.வேலாயுதன்
velayuthan.kasu@kamadenu.in

“எந்நேரம் பார்த்தாலும் செல்போனே கதின்னு கிடந்தா வேலைக்கு ஆகுமா? போய்ப் பொழைப்பைப் பாரு…” என்ற குரல் இன்றைக்குப் பல வீடுகளில் ஒலிப்பதைக் கேட்கிறோம். பொழுதுபோக்குக்காக செல்போனில் இயங்கத் தொடங்கி அதில் சிறைப்பட்டுக் கிடப்பவர்களுக்கு மத்தியில், எப்படியாவது வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டும் எனும் வெறியுடன் செல்போனில் தகவல் தேடுபவர்களும் உண்டு. அப்படியான தேடலின் தொடர்ச்சியாகத் தேங்காய் சிரட்டையில் கலைப் பொருட்களை உருவாக்கி விற்பனை செய்து வென்று காட்டியிருக்கிறார் ராஜலட்சுமி.

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகேஉள்ள குக்கிராமம் கோடங்கிபாளையம். இங்குள்ள ஒரு ஒதுக்குப்புறமான குடோன்தான் ராஜலட்சுமியின் பணிமனை. அதனுள் அடங்கியிருக்கும் குட்டி அறையே இவரின் அலுவலகம். அங்கே இவரது கணினி 
மேஜையைச் சுற்றி குவிந்துகிடக்கின்றன கொட்டாங்குச்சியில் பிறந்த கலைப் பொருட்கள்.

“எந்த நேரம் எந்த நாட்டுல இருந்து ஆர்டர் அனுப்புவாங்கன்னே தெரியாது. அப்படி அனுப்புறவங்களுக்கு செல்போன்ல படம் எடுத்து அனுப்பத்தான் இதையெல்லாம் தயாரா வச்சிருக்கேன். ஹேண்டில் ஹோல்டர், லைட் செட், டீ கப், ஐஸ்க்ரீம் கப், ரைஸ் பவுல்னு இப்படி கடந்த ரெண்டு வருசத்துல 37 வகையிலான கொட்டாங்குச்சி கலைப் பொருட்கள் மலேசியா, சிங்கப்பூர், அமெரிக்கா, ஜப்பான், மாலத்தீவுன்னு ஏற்றுமதி ஆகியிருக்கு” என்று உற்சாகக் குரலில் சொல்கிறார் ராஜலட்சுமி.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE