ராகுல் ரசித்த மொழிபெயர்ப்பாளர்!- சாக்லேட் சந்தோஷம் பகிரும் ஸபா பெபின்

By காமதேனு

என்.சுவாமிநாதன்
swaminathan.n@kamadenu.in

திடீரென கிடைத்த மேடை அது. அதுவும் ராகுல் காந்தி எனும் தேசியத் தலைவரின் உரையை மொழிபெயர்க்கும் அரிய வாய்ப்பு. ஆனாலும் தடுமாற்றம் எதுவுமின்றி மேடையைக் கையாண்ட விதத்தில் கேரளம் கொண்டாடும் நபராகிவிட்டார் ப்ளஸ் ஒன் மாணவியான ஸபா பெபின்.

மேடைப் பேச்சை உடனுக்குடன் மொழிபெயர்த்துச் சொல்வதில் தங்கபாலு போன்ற தலைவர்களே தடுமாறி நின்றதைப் பார்த்த நமக்கு, அரசுப் பள்ளி மாணவியான ஸபா பெபின், ராகுலின் ஆங்கில உரையை சரளமாக மலையாளத்தில் மொழிபெயர்த்தது வியப்பூட்டும் விஷயம்தான். ராகுலே இதை வெகுவாக ரசித்தார் என்பது கூடுதல் சிறப்பு.

கேரளத்தின் வயநாடு தொகுதி எம்பி-யான ராகுல், சமீபத்தில் தனது தொகுதிக்குட்பட்ட கருவாரக்குண்டு அரசு மேல்நிலைப் பள்ளியில் புதிய ஆய்வகக் கட்டிடத்தைத் திறந்துவைக்க வந்திருந்தார். அவரது உரையை மொழிபெயர்க்க அனில்குமார், கே.சி.வேணுகோபால் உள்ளிட்ட காங்கிரஸ் பிரமுகர்களும் தயாராய் இருந்தனர். ஆனால் ராகுலோ, திடீரென்று மாணவ - மாணவிகளைப் பார்த்து, “என் பேச்சை மலையாளத்தில் உங்களில் யாரேனும் மொழிபெயர்க்க முடியுமா?” எனக் கேட்க, ஸபா பெபின் தைரியமாக கைதூக்கினார். “பெரிய கைதட்டல் கொடுத்து அவருக்கு வரவேற்பைக் கொடுங்கள்” என ராகுல் சொல்ல, கரவொலிகளுக்கு நடுவே மேடையேறினார் ஸபா பெபின். ராகுலும் ஸபாவின் கையில் மைக்கை கொடுத்து தட்டிக்கொடுத்து ஊக்குவித்துவிட்டுப் பேச ஆரம்பித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE