கடிவாளம் போடாவிட்டால் வண்டி குடை சாய்ந்துவிடும்!- பாஜகவுக்கு புத்தி சொல்லும் திருச்சி சிவா

By காமதேனு

கே.கே.மகேஷ்
magesh.kk@kamadenu.in

மாநிலங்களவையில் தமிழகத்தின் சார்பில் ஓங்கி ஒலிக்கிற குரல்களில் முக்கியமானது திருச்சி சிவாவுடையது. பாஜக அரசு கொண்டுவந்து நிறைவேற்றியிருக்கும் குடியுரிமை சட்டத் திருத்த மசோதா மீதான விவாதத்தில் இவர் ஆற்றிய ஆவேச உரை, கட்சி எல்லைகளைக் கடந்து பலரது கவனத்தையும் ஈர்த்தது. ‘சிறந்த நாடாளுமன்றவாதி’ விருதையும் பெற்றிருக்கும் சிவாவுடன் ஒரு பேட்டி.

குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை ஏன் இவ்வளவு தீவிரமாக எதிர்க்கிறது திமுக?

அண்டை நாடுகளிலிருந்து சட்டவிரோதமாக இந்தியாவில் குடியேறியவர்களுக்குக் குடியுரிமை வழங்குவது பற்றிப் பேசுகிறது இந்த மசோதா. நம்மோடு எல்லையைப் பகிர்ந்துகொள்ளும் அண்டை நாடுகள் பல இருக்கும்போது, பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய மூன்று நாடுகளை மட்டும் எப்படித் தேர்ந்தெடுத்தீர்கள் என்பதே எங்கள் கேள்வி.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE