இதைவிட பரிசு வேறென்ன வேண்டும்? - பத்திரிகை வடிவமைக்கும் படைப்பாளி!

By காமதேனு

கா.சு.வேலாயுதன்
velayuthan.kasu@kamadenu.in

பொள்ளாச்சி டவுன் பாலகோபாலபுரம் வீதியில் உள்ள கட்டிடத்தின் ஒற்றை அறையில், திருமணம் உள்ளிட்ட விசேஷ நிகழ்வுகளுக்கு அழைப்பிதழ்கள் வடிவமைத்துத் தரும் பணியைச் செய்துவருபவர் கனகராஜன். விசிட்டிங் கார்டு, பில் புக், துண்டுப் பிரசுரங்கள் உள்ளிட்டவற்றைக் கணினியில் வடிவமைத்துத் தரும் இவரது எழுத்துகள், வெகுஜன இதழ்களின் வாசகர்களுக்கு நன்கு பரிச்சயமானவை. சமத்தூர் விவேகானந்தா காலனியில் ஓட்டுக்கூரை வேய்ந்த ஒண்டுக் குடித்தன வீட்டில் வசிக்கும் இந்த எளிய எழுத்தாளரைச் சந்தித்துப் பேசியபோது, அழகான ஆச்சரியங்கள் காத்திருந்தன.

தலைகுனிந்து செல்ல வைக்கும் தாழ்வான நிலைப்படியைத் தாண்டி இவரது வீட்டுக்குள் சென்றால் கட்டில், மெத்தை. அலமாரி என்று பார்த்த இடத்திலெல்லாம் பல்வேறு தலைப்பிலான இலக்கியப் படைப்புகள் கண்ணில் படுகின்றன. இவை தவிர வார, மாத, பருவ இதழ்களின் குவியல்கள்.

பகல் நேரத்தில் அழைப்பிதழ் வடிவமைப்பில் பரபரப்பாக இருக்கும் கனகராஜன், இரவில் இலக்கிய வாசிப்பில் மூழ்கித் திளைக்கிறார். 30 ஆண்டுகளுக்கும் மேலாக வார, மாத இதழ்களில் ஏராளமாக எழுதிக் குவித்துவருகிறார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE