கார்ப்பரேட் கம்பெனியிடம் கழகத்தை ஒப்படைக்கலாமா?- பிரசாந்த் கிஷோருக்கு எதிராகக் கொந்தளிக்கும் திமுக!

By காமதேனு

குள.சண்முகசுந்தரம்
shanmugasundaram.kl@kamadenu.in

பிரசாந்த் கிஷோர் - இப்போது திமுக வட்டாரத்தில் அதிகம் பேர் முணுமுணுக்கும் பெயர் இதுதான். “எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலை வென்றெடுப்பதற்கான வியூகங்களை வகுக்க பிரசாந்த் கிஷோரின் ‘ஐ பேக்’ நிறுவனத்துடன் திமுக ஒப்பந்தம் பேசியிருக்கிறது. மாதம் 15 கோடி ரூபாய் வீதம் மொத்தம் 15 மாதங்களுக்கு 225 கோடி ரூபாய்க்கு டீல் பேசிக் கொண்டிருக்கிறார் கிஷோர்” என்றெல்லாம் திமுக வட்டாரத்திலிருந்தே செய்திகள்!

கருணாநிதி இருந்தவரை...

கருணாநிதி ஆக்டிவ்வாக இருந்த வரை உளவுத் துறையைக் கூட அவ்வளவாய் நம்ப மாட்டார். கட்சியின் அடிமட்டத்திலிருந்து வரும் தகவல்களை அதிமுக்கியத்துவம் கொடுத்துக் கேட்பார். அதைவைத்து அவரே ஒரு தீர்க்கமான முடிவுக்கு வந்துவிடுவார். அது சரியானதாகவும் பல நேரங்களில் நியாயமானதாகவும் இருக்கும். மாவட்ட திமுகவில் நடக்கும் உள்குத்து விவகாரங்கள் உடனுக்குடன் தனக்கு வந்துசேர வேண்டும் என்பதற்காகவே ஒவ்வொரு மாவட்டத்திலும் கட்சிக்குள் இரண்டு கோஷ்டிகளை ஓடவிட்டுக் கொண்டிருப்பார் கருணாநிதி. ஆனால், அவரது செயல்பாடுகள் முடங்கிப் போனதும் இதெல்லாம் அற்றுப் போனது. உடைத்துச் சொல்லப்போனால் கடைக்கோடி தொண்டனுக்கும் கட்சித் தலைமைக்குமான தொடர்பே அறுந்து போனது. விளைவு... வியூக வகுப்பாளர்களைத் தேடி திமுகவும் ஓட ஆரம்பித்தது. அப்படி அறிவாலயத்துக்குள்ளே வந்ததுதான்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE