வருகிறது கேரள வங்கி!- மாநில சுயாட்சிக்கு பாதை காட்டும் மலையாள தேசம்

By காமதேனு

என்.சுவாமிநாதன்
swaminathan.n@kamadenu.in

தங்கள் மாநிலத்துக்கென்று பிரத்யேகமான பொதுத் துறை வங்கியொன்றைத் தொடங்கப்போகிறது கேரள அரசு. பல்வேறு 
இடர்ப்பாடுகளுக்கு நடுவில் கடந்த அக்டோபர் மாதம் ரிசர்வ் வங்கியிடம் இதற்கான ஒப்புதலைப் பெற்றார் முதல்வர் பினராயி விஜயன். பூர்வாங்க பணிகள் எல்லாம் முடிந்து கேரள மாநிலக் கூட்டுறவு வங்கியுடன் 13 மாவட்டக் கூட்டுறவு வங்கிகளையும் இணைத்து ‘கேரள வங்கி’ எனும் புதிய வங்கியை ஜனவரியில் தொடங்குகிறது கேரள அரசு.

சரி, புதிய வங்கியைத் தொடங்க வேண்டிய தேவை கேரளத்துக்கு ஏன் வந்தது? இதன் பின்னணியில், மாநில சுயாட்சி தொடங்கி பல்வேறு அரசியல் கணக்குகளும் இருக்கின்றன. 2016 சட்டமன்றத் தேர்தலின்போதே மார்க்சிஸ்ட் கட்சியின் தேர்தல் அறிக்கையில் கேரள வங்கி தொடங்குவதற்கான திட்டமும் இருந்தது. தேர்தலில் வென்று முதல்வரான பினராயி விஜயன், “புதிய வங்கியானது மாநில மற்றும் மாவட்டக் கூட்டுறவு வங்கிகளை இணைத்து இரண்டு அடுக்கு கொண்ட வங்கியாகச் செயல்படும். கூட்டுறவுத் துறை
யின் விஸ்தரிப்புக்கும் வளர்ச்சிக்கும் புதிய வங்கி உதவும்” என்று சட்டமன்றத்தில் அறிவித்தார். அதைத்தான் இப்போது செயல்படுத்தவிருக்கிறார்.

பின்னணி என்ன?

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE