மண மாலையும் மஞ்சளும் சூடி... திருநங்கையை மணமுடித்த ஆணழகன்!

By காமதேனு

என்.சுவாமிநாதன்
swaminathan.n@kamadenu.in

திருநங்கைகளின் திருமணக் கனவுகள் அவ்வளவு எளிதில் நனவாவதில்லை. தவறான பொதுப்புத்தி, புறக்கணிப்பு என்று புரிதலற்ற சமூகம் கொடுக்கும் அழுத்தத்துக்கு இடையில் திருநங்கைகள் மணம் புரிந்துகொள்வது என்பது அரிதான நிகழ்வே. அப்படியான அரிதான, அழகான திருமணம்தான் ‘மிஸ்டர் கேரளா’ பிரவீனுக்கும், நடனப் பள்ளி நடத்தும் திருநங்கை ஷிகாவுக்கும் இடையில் நடந்திருக்கும் காதல் மணம்.

திருச்சூர் மாவட்டத்தின் படியூரில் ஜிம் ஒன்றில் பயிற்றுநராக இருக்கும் பிரவீன், கட்டுக்கோப்பாய் உடலைப் பராமரிக்கும் சேட்டன்களுக்கு மத்தியில் பிரசித்தம். நடப்பாண்டில் 60 கிலோ எடை பிரிவில் ‘மிஸ்டர் கேரளா’ பட்டத்தைத் தட்டிச்சென்றவர் இவர். ஷிகா ஆலப்புழையைச் சேர்ந்த நாட்டியக் கலைஞர். ஆலப்புழை உட்பட நான்கு இடங்களில் இவரது நாட்டியப் பள்ளியின் கிளைகள் இருக்கின்றன. இதோ இப்போதுகூட திருச்சூரில், தனது கணவர் வீட்டு அருகே ஐந்தாவது கிளையைத் தொடங்கவிருக்கிறார். சரி, எப்படி மலர்ந்தது இந்தக் காதல்? தெரிந்துகொள்ள, திருச்சூரில் உள்ள பிரவீனின் இல்லத்துக்குச் சென்றிருந்தேன். பூரிப்புடன் வரவேற்கும் புதுமணத் தம்பதியினர், தங்கள் காதல் கதையைச் சொல்ல ஆரம்பித்தனர்.

முதலில் பிரவீன் பேசினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE