மலைக்கவைக்கும் மால்வேர் அட்டாக்!

By காமதேனு

லதா ரகுநாதன்
lrassociates@gmail.com

கணினி பயன்பாட்டுக்குப் பழகிய பின்னர், நாம் எதிர்கொண்ட முக்கிய சவால், ‘வைரஸ்’. வகைதொகையில்லாமல் கண்ட வலைதளங்களை மேயும் பழக்கம் உள்ளவர்களின் கணினிகள் அவ்வப்போது வைரஸ் தாக்குதலுக்குள்ளாகிவிடும். இன்றைக்குக் கணினியைவிட அதிகமாகப் பயன்பாட்டில் இருக்கும் செல்போனில் இதுபோன்ற ஏராளமான சவால்கள் இருக்கின்றன. கடந்த வாரத்தின் தொடர்ச்சியாக, இந்த வாரம் மேலும் சில அபாயங்களை அறிந்துகொள்வோம்.

கணினியிலாவது, இப்படியான தாக்குதல்கள் நடந்தால் அது உடனே நமக்குத் தெரிந்துவிடும். காய்ச்சல் கண்டதுபோல், சோர்வாக இயங்கும் கணினி, வைரஸ் தாக்குதல் உச்சமடைந்ததும் மொத்தமாகச் சுருண்டுவிடும். செல்போனில் கதையே வேறு. ஏதோ ஒரு வழியில் செல்போனுக்குள் நுழையும் தீம்பொருட்கள் (Malware) பேசாமடந்தையாக ஓர் ஓரத்தில் நம் கண்களுக்குத் தென்படாமல் பதுங்கியிருக்கும். செல்போனில் நாம் செய்துவரும் வங்கிப் பரிவர்த்தனை உள்ளிட்ட பல்வேறு பரிவர்த்தனைகளைப் பற்றிய தரவுகளை உட்கவர்ந்து, பெரும் பாதிப்புகளை ஏற்படுத்திவிடும். ஹேக்கர்கள் ஹாயாக அமர்ந்து நம் பணத்தைத் தின்றுச் செரித்துவிடுவார்கள். பேங்கர் (Banker) எனும் தீம்பொருள் ஓர் உதாரணம், இந்தத் தீம்பொருள் மூலம், நம் வங்கி சார்ந்த தகவல்கள் அனைத்தையும் ஹேக்கர்களால் திருடிவிட முடியும்.

எப்படி வருகின்றன தீம்பொருட்கள்?

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE