திட்டமிட்டுப் பொய் சொல்கிறார் முதல்வர்!- திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி காட்டம்

By காமதேனு

கே.கே.மகேஷ்
magesh.kk@kamadenu.in

அனுதினமும் திமுக எதிர்கொண்டுவரும் புதிய சவால்கள், குற்றச்சாட்டுகள் குறித்து, அக்கட்சியின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதியிடம் விளக்கம் பெறலாம் என்று அண்ணா அறிவாலயம் சென்றிருந்தேன். நல்ல கூட்டம். ‘எதிர்க்கட்சியாக இருக்கும்போதும் அறிவாலயம் நிறைந்திருக்க வேண்டும்’ என்றே கருணாநிதி விரும்புவார். ‘கருணாநிதி இன்று இருந்திருக்க வேண்டும்’ என்று நினைத்துக்கொண்டே ஆர்.எஸ்.பாரதியைச் சந்தித்தேன். பரபரப்பாக இயங்கிக்கொண்டிருந்தவர், கிளம்பும் தறுவாயில் என்னுடன் உரையாடினார். அவரது பேட்டி:

அடுத்தடுத்து ஏதாவது ஒரு காரணத்தைச் சொல்லி, வழக்கைப் போட்டு உள்ளாட்சித் தேர்தலை நடத்தவிடாமல் திமுக தடுக்கிறது என்று முதல்வர் பழனிசாமி குற்றம்சாட்டுகிறாரே?

திட்டமிட்டுப் பொய் சொல்கிறார் முதல்வர். 2016-ல், நாங்கள் வழக்குப் போட்டது உண்மை. பழங்குடியினருக்கு இடஒதுக்கீடு வேண்டும் என்றுதான் அந்த வழக்கைப் போட்டோம். 2018-லேயே அந்த வழக்குமுடிந்துவிட்டது. அப்போது, விதிமுறைகளின்படி தேர்தல் நடத்த வேண்டும் என்று உச்ச  நீதிமன்றம் தீர்ப்பு சொல்லிவிட்டது. ஆனாலும் தேர்தல் நடத்தப்படவில்லை. அதனால் நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடர்ந்தோம். தண்டனை கொடுத்துவிடுவோம் என்று நீதிபதி எச்சரித்ததும், நீதிமன்றத்திலேயே தேர்தல் ஆணையம் மன்னிப்புக் கேட்டது. டிசம்பருக்குள் தேர்தல் நடத்த வேண்டும் என்று உச்ச  நீதிமன்றம்உத்தவிட்டதும்கூட நாங்கள் போட்ட வழக்கில்தான்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE