மீண்டும் எழுதப்படும் பழைய அத்தியாயம்- அச்சத்தில் இலங்கை சிறுபான்மையினர்கள்!

By காமதேனு

வெ.சந்திரமோகன்
chandramohan.v@hindutamil.co.in

“சிங்கள மக்களின் ஆதரவு மட்டும் இருந்தாலே வென்றுவிடலாம் என்பது எனக்கு முன்பே தெரியும். எனினும், எனது வெற்றியில் தமிழ் மற்றும் முஸ்லிம் சமூகத்தினரும் பங்கேற்க வேண்டும் என்று அவர்களைக் கேட்டுக்கொண்டேன். ஆனால், எனது எதிர்பார்ப்பை அவர்களது எதிர்வினை பூர்த்திசெய்யவில்லை” இலங்கையின் எட்டாவது அதிபராக, வடக்கு மத்திய மாகாணத்தின் அனுராதபுரத்தில் உள்ள பவுத்தக் கோயில் ஒன்றில் பதவியேற்றுக்கொண்ட கோத்தபய ராஜபக்ச, தனது உரையில் குறிப்பிட்டிருக்கும் வார்த்தைகள் இவை.

இது தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் விடப்பட்ட மறைமுக எச்சரிக்கை எனும் குரல்கள் எழத் தொடங்கிய நிலையில், கேகாலை மாவட்டம் யட்டியன்தோட்டை தேயிலைத் தோட்டத்தில் மலையகத் தமிழர்கள் தாக்கப்பட்ட செய்தி வெளியானது. ‘அடையாளம் தெரியாத’ சிலர், “யாருக்கு வாக்களித்தீர்கள்?” என்று கேட்டு மலையகத் தமிழர்களைத் தாக்கியிருக்கிறார்கள். கண்டி அருகே, வெற்றிக் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட சிலரும் தமிழர்களைத் தாக்கியிருக்கிறார்கள். வாக்குப் பதிவு நாளின்போதே மன்னார் அருகே வாக்களிக்கச் சென்ற முஸ்லிம்கள் தாக்கப்பட்டார்கள்.

இலங்கை இறுதிப் போரில் போர்க்குற்றங்களை நிகழ்த்தியவர்; முஸ்லிம்கள் மீதான வெறுப்புணர்வைப் பரப்பி, தாக்குதலில் ஈடுபடும் பவுத்தக் குழுக்களின் பின்னணியில் இருப்பவர் என்றெல்லாம் பேசப்படும் கோத்தபய அதிபராகியிருப்பது தமிழர்களுக்கும், முஸ்லிம்களுக்கும் அச்சத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியிருப்பதில் ஆச்சரியமில்லை.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE