தேர்தல் பணிக்கு ஆசிரியர்களைத்தான் அனுப்ப வேண்டுமா?

By காமதேனு

உமா
uma2015scert@gmail.com

கற்பித்தலில் கவனம் செலுத்த முடியாத அளவுக்கு ஆசிரியர்கள் கடும் நெருக்கடிகளை எதிர்கொள்கிறார்கள் என்பதைக் கடந்த சில வாரங்களாக விவாதித்துவருகிறோம். அதற்கான காரணிகளையும் பட்டியலிட்டு வருகிறோம். அந்தப் பட்டியலில் சேர்க்கப்பட வேண்டிய முக்கியக் காரணி - தேர்தல் பணி.

தேர்தல் பணி என்றால் வாக்குப் பதிவு நடக்கும் நாளில் வழங்கப்படும் பணி மட்டுமல்ல. வருடம் முழுவதும் பணிபுரிய வேண்டிய வாக்குச் சாவடி அலுவலர் (BLO-Booth level officer) உள்ளிட்ட மேலும் சில பணிகள் உண்டு. அவற்றைச் செய்தே ஆக வேண்டிய கட்டாயத்தில், கசப்புகளை மறைத்துக்கொண்டு பணியாற்றி வருகிறார்கள் ஆசிரியர்கள்.

இதோ, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு மற்றும் திருத்தம் மேற்கொள்வதற்கான கால அவகாசம் நவம்பர் 18 வரை நீட்டிக்கப்படுகிறது என்று அறிவித்திருக்கிறது மாநிலத் தேர்தல் ஆணையம். அந்தப் பணிகளில் ஈடுபடுத்தப்படுபவர்கள் ஆசிரியர்கள்தான். இதற்காக அவர்கள் எதிர்கொள்ளும் சிரமங்கள் எண்ணற்றவை.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE