திருவள்ளுவருக்கு மதச்சாயம் பூசியதே திமுகதான்!- அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் பேட்டி

By காமதேனு

கே.கே.மகேஷ்
magesh.kk@kamadenu.in

தமிழ் வளர்ச்சி மற்றும் தமிழ் பண்பாட்டுத் துறையில் இத்தனை அறிவிப்புகளா என்று வியக்கிற அளவுக்கு புதிது புதிதாக திட்டங்களைக் கொண்டுவந்து கொண்டிருப்பவர் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன். இன்னொரு பக்கம் அதிமுகவுக்குள் இருக்கும் பாஜக முகம் என்று சொல்வது போல அவரது கருத்துகளும் ட்வீட்களும் இருக்கின்றன. திருவள்ளுவர் சர்ச்சை ஓடிக்கொண்டிருந்த நேரத்தில் மதுரைக்கு வந்திருந்தவரை பேட்டிக்காகப் பிடித்தேன்.

வெறும் கட்டிடமாக இருந்த மதுரை உலகத் தமிழ்ச்சங்கம் இப்போது களைகட்டியிருக்கிறது. அங்குள்ள கீழடி அருங்காட்சியகத்தை விரிவுபடுத்தும் திட்டம் இருக்கிறதா?

கீழடி அகழ்வாய்வு மூலம் கிடைத்த 6,720 தொல்பொருட்கள் தமிழ்ச்சங்கத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இரண்டு மெய்நிகர் காட்சிக் கருவிகளும் நிறுவப்பட்டுள்ளன. தினமும் 5 ஆயிரம் பேர் அதனைப் பார்வையிடுகிறார்கள். ஒவ்வொரு பள்ளி, கல்லூரியும் தங்கள் மாணவர்களை அரை மணி நேரமாகிலும் அங்கே அழைத்துச் செல்ல வேண்டும் என்று ஆணை பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. தற்போது அங்கே 5 வழிகாட்டி(கைடு)கள் மட்டுமே இருக்கிறார்கள். அவர்களின் எண்ணிக்கையையும், மெய்நிகர் காட்சிகளின் எண்ணிக்கையையும் விரைவில் அதிகரிக்கவுள்ளோம்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE