வாசிப்பும் எழுத்தும் எனக்கு வலி நிவாரணி!- எல்லைகளை விரிக்கும் எழுத்துக் காதலர்

By காமதேனு

என்.சுவாமிநாதன்
swaminathan.n@kamadenu.in

நாகர்கோவில் அருகே உள்ள நாவல்காடு கிராமத்தைச் சேர்ந்த காந்திலாலுக்கு, உடல் அளவில் சக்கர நாற்காலிதான் உலகம். ஆனால், வாசிப்பாலும் எழுத்தாலும் நான்கு சுவர்களின் எல்லைக்கு வெளியே வானத்தில் பறக்கும் கவிஞர் இவர்.

பளீரென்ற நிறமும் வசீகரிக்கும் முகமுமாக முதல் பார்வையிலேயே மனசுக்கு நெருக்கமாகிவிடும் காந்திலால், 36 வயது குழந்தை. வளரும் பருவத்தில் தாக்கிய தசைச்சிதைவு நோய் இவரது வாழ்வையே புரட்டிப்போட்டது. சுயமாக இயங்க முடியாத இவருக்கு இவரது குடும்பமும் நண்பர்களும்தான் உறுதுணை.

தன் பெயருடன் தன் ஊர் பெயரான நாவல்காடு என்பதையும் சேர்த்து நாவல் காந்தி என்னும் பெயரில் எழுதிவரும் இவர், ‘காலம் இன்னும் இருக்கிறது’, ‘கொஞ்சும் காதல் கெஞ்சும் கவிதை’ என இரு கவிதைத் தொகுப்புகளை வெளியிட்டிருக்கிறார். வீட்டிலேயே கணினியில் தமிழில் தட்டச்சு செய்துகொடுக்கும் பணியும் செய்துவருகிறார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE