எம்சின்க்: உளவு சொல்ல ஒரு செயலி!

By காமதேனு

லதா ரகுநாதன்
lrassociates@gmail.com

எண்பதுகளில் வெளியான பல திரைப்படங்களில் இப்படி ஒரு காட்சியைப் பார்த்திருப்பீர்கள். பதின்பருவப் பெண் தரைவழி இணைப்பு போனில் (landline phone) தன் காதலனுடன் பேசிக்கொண்டிருப்பாள். வீட்டின் மாடி அறையில் ஒரு இணை போன் (Parallel phone) இருக்கும். யதேச்சையாக அந்த போனை எடுக்கும் அந்தப் பெண்ணின் தந்தை, தன் மகள் தன் காதலனுடன் பேசுவதைக் கேட்டு அதிர்ந்து நிற்பார். இன்றைக்கு எல்லா தலைமுறையினரின் கைகளிலும் செல்போன் தவழ்கிறது. குழந்தைகள் யாரிடம் செல்போனில் பேசுகிறார்கள், எந்தவிதமான குறுஞ்செய்தி, படங்களைப் பகிர்ந்துகொள்கிறார்கள் என்று தொலைவிலிருந்தபடியே உடனுக்குடன் கண்காணிக்க பெற்றோர்களுக்கு அப்படி ஒரு வசதி இருக்கிறதா?

இருக்கிறது. அதன் பெயர்  `எம்சின்க்' (MSYNCH). இது ஒரு செல்போன் செயலி. இதை உங்கள் செல்போனிலும் உங்கள் குழந்தையின் செல்போனிலும் நிறுவிவிட்டால் (install) போதும். செல்போனில் உங்கள் குழந்தையின் செயல்பாடுகளை உங்கள் கண்காணிப்பு வளையத்துக்குள் முற்றிலுமாகக் கொண்டுவந்துவிட முடியும். அவர்கள் பயன்படுத்தும் டேப்லெட்டையும் இப்படிக் கண்காணிக்க முடியும்.

நீங்கள் எந்த செல்போனைக் கண்காணிக்க விரும்புகிறீர்களோ, அந்த செல்போனில் இந்தச் செயலியை நிறுவச் (install) செய்ய வேண்டும். அதில், தேவையான விவரங்களைப் பதிவிட வேண்டும். அதற்கு அதிகபட்சம் 5 நிமிடங்கள்தான் செலவாகும். அதன் பிறகு அந்த செல்போனை நீங்கள் தொட்டுக்கூட பார்க்க வேண்டியதில்லை. ஆனால், தொலைவிலிருந்தே அதைக் கண்காணிக்க முடியும்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE