அழிக்கப்பட்ட அல் - பாக்தாதி!: முடிவுக்கு வருமா? ஐஎஸ் அட்டூழியம்?

By காமதேனு

சந்தனார்
readers@kamadenu.in

கொடூரமான வழிமுறைகளைப் பின்பற்றி உலகை அச்சுறுத்திவந்த ஐஎஸ் பயங்கரவாத அமைப்பின் தலைவர் அபு பக்கர் அல்-பாக்தாதியின் அத்தியாயம் ஒருவழியாக முடிவுக்கு வந்திருக்கிறது.

சிரியாவின் இத்லிப் மாகாணத்தில் உள்ள பரிஷா கிராமத்தில் பதுங்கியிருந்த 48 வயது பாக்தாதி, அமெரிக்கப் படைகள் தன்னை நெருங்கிவிட்டதை அறிந்ததும் உடலில் கட்டியிருந்த குண்டுகளை வெடிக்கச் செய்து தற்கொலை செய்துகொண்டார். இதையடுத்து, இது ஐஎஸ் அமைப்புகான முழுமையான முடிவுரையாக இருக்குமா என்ற எதிர்பார்ப்பு எல்லா தரப்பிலிருந்தும் எழுந்திருக்கிறது. உண்மையில் அது சாத்தியமா?

ஆரம்பமான அழிவுசக்தி

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE