வாங்க வாட்ஸ் - அப் அனுப்பலாம்!

By காமதேனு

ரிஷபன்
rsrinivasanrishaban@gmail.com

கடைத்தெருவுக்குப் போய்விட்டு வீட்டுக்குள்ள வந்தேன். பையை வெச்சதுமே வீட்டம்மிணி சொன்னாங்க. ``எதிர் வீட்டுக்காரர் 
நாலு தடவை வந்து தேடிட்டுப் போயிட்டார்... உங்களைப் பார்க்கணுமாம்.’’ என்னவா இருக்கும்... ஏதாச்சும் கைமாத்து கேப்பாரா? மூளைக்குள்ள அனாவசிய ட்ராக்லாம் ஓட ஆரம்பிச்சுச்சு.

“வந்துட்டீங்களா...”ன்னுட்டு அவரே உள்ர வந்தார். எப்போ வருவேன்னு வழி மேல விழி வச்சு காத்திருந்திருப்பார் போல! ம்ம்னு முனகினேன்.  “புது போன் வாங்கிட்டேன்” சின்னப் புள்ள மாதிரி நீட்டினார். கை அகலத்துக்கு போன்.  “ஃபேஸ்புக்... வாட்ஸ் - அப் எல்லாம் போட்டுட்டேன். ஆனா, எப்படி அனுப்பறதுன்னு தெரியல. அதான் உங்ககிட்ட கேட்டுக்கலாம்னு...”னு இழுத்தாரு. அடச்சே.. இதுக்கா இவ்ளோ ரகளை...

அவர அப்படியே ஒக்கார வச்சு, வாட்ஸ் - அப்ல எப்படி அனுப்பறதுன்னு சொல்லிக் கொடுத்தேன். தப்புத் தப்பா திருப்பிச் சொன்னார். அப்படி இல்ல... இப்படின்னு அவரையே செய்ய வச்சேன். அரை மணி அவருக்குப் பாடம் எடுத்ததுல எனக்கு டங்குவார் அந்து போச்சு. ஒரு வழியா அவரை அனுப்பிட்டு கதவை அடிச்சு சாத்தினேன்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE