தமிழக கல்வித் துறையில் அர்பன் நக்சல்கள்!- பாஜக தேசியச் செயலாளர் எச்.ராஜா அதிரடி

By காமதேனு

கே.கே.மகேஷ்
magesh.kk@kamadenu.in

எதிர்க்கட்சித் தலைவர்களைச் சகட்டுமேனிக்கும் விமர்சிக்கத் தயங்காத பாஜக தேசியச் செயலாளர் எச்.ராஜா, தனது இரண்டாவது மகள் திருமணத்துக்காகக் கட்சி வேறுபாடின்றி அனைவருக்கும் அழைப்பிதழ் கொடுத்துக்கொண்டிருக்கிறார். காமதேனு பேட்டிக்காக போனில் ஆளைப் பிடித்து, “ஸ்டாலினுக்கும் அழைப்பு கொடுப்பீர்களா?” என்று கேட்டால் “நட்பில் எனக்குப் பாரபட்சமே கிடையாது” என்கிறார் கனிவுடன்.

கொஞ்சம் கரடு முரடாகப் பேசுபவர்தானே என்று எச்.ராஜாவிடம், நாமும் அப்படிக் கேள்வி கேட்க முடியாது. ‘பட்’டென்று பாதியிலேயே பேட்டியை முடித்துக்கொள்வார். அதனால் அதீத கவனத்துடன் ராஜாவிடம் ஒரு பேட்டி:

கழகங்கள் இல்லாத தமிழகத்தை அமைப்போம் என்றீர்களே, இப்போது தமிழகத்தில் பாஜகவின் வளர்ச்சி எப்படியிருக்கிறது?

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE