பதிவேடு மட்டும் போதுமா? பாடம் நடத்த வேண்டாமா?

By காமதேனு

உமா
uma2015scert@gmail.com

தமிழக அரசுப் பள்ளிகளில் நிலவும் பிரச்சினைகள் குறித்து முந்தைய கட்டுரைகளில் விரிவாக அலசியிருக்கிறோம். கற்பித்தல் - கற்றல் நடவடிக்கையில் இடையூறு ஏற்படும் வகையில் ஆசிரியர்களுக்குத் தரப்படும் பணிச்சுமைகளைப் பற்றி இந்த வாரம் பார்ப்போம் – குறிப்பாகப் பதிவேடு பராமரிப்பு பற்றி. ஆம், மாணவர்களின் கல்வித் தரத்தைப் பாதிக்கும் காரணிகளைப் பட்டியலிட்டால் அதில் முதல் இடத்தில் இருப்பது – பதிவேடு பராமரிப்புதான்!

நேரத்தை விழுங்கும் பணி

தமிழகத்தின் எந்த மூலையிலும் உள்ள அரசுப் பள்ளி ஆசிரியரைக் கேட்டாலும் ஒரே மாதிரியான பதில்தான் கிடைக்கும். ‘பாடம் நடத்தவே நேரம் ஒதுக்க முடியாத அளவுக்குப் பல்வேறு பதிவேடுகளைப் பராமரிக்க வேண்டியிருக்கிறது’ என்பதுதான் அது. ``15 வருடங்களுக்கு முன்பெல்லாம் காலையில் பள்ளிக்குள் நுழைந்து மாணவர் வருகைப் பதிவேட்டில் வருகையைப் பதிவுசெய்த பிறகு பாடம் நடத்த ஆரம்பித்தால், இடம் கொள்ளாமல் நூறு குழந்தைகள் இருந்தாலும், மாலையில் மனத் திருப்தியுடன் வீட்டிற்குச் செல்வோம். நம்மால் இன்று இவர்களுக்குக் குறிப்பிட்ட பாடப் பகுதியை நடத்தி முடிக்க முடிந்தது என்ற எண்ணம் இருக்கும். ஆனால், இன்றோ மனம் குற்ற உணர்வில் வதைக்கிறது. ஒரு வாரமாக ஒரு வரியைக் கூட எனது மாணவர்களுக்குக் கற்றுக்கொடுக்க முடியவில்லை’’ என்று புலம்புகிறார் ஓர் ஈராசிரியர் பள்ளியின் தலைமை ஆசிரியர் .

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE