தாமிரபரணி தண்ணிய திருப்பப் போறேன்!- சிரிப்பு வேட்பாளர் ஹரி நாடார் சீரியஸ் பேட்டி

By காமதேனு

கே.கே.மகேஷ்
magesh.kk@kamadenu.in

ஒல்லி உடம்பு, அதற்குப் பொருத்தமில்லாத தலைமுடி, கிலோ கணக்கில் தங்க(?) நகைகள், வலது காதில் ப்ளூடூத், வெள்ளை ஜிப்பா... பார்த்தாலே சிரிப்பு வரும் இந்த பலே பலே தோற்றத்துக்குச் சொந்தக்காரர் ஹரி நாடார்.

பக்கம் பக்கமாய் பத்திரிகை விளம்பரங்கள், காந்தியின் குரங்கு பொம்மைகள் போல அவ்வப்போது கொடுக்கிற ஸ்டில்ஸ், பாலியல் புகார் நாயகி ஸ்ரீரெட்டியுடன் டிக்டாக் வீடியோக்கள் என்று தென்மாவட்ட மக்களுக்கு சிரிப்புக் காட்டிக்கொண்டிருந்தவர் இப்போது திடீரென தேர்தல் களத்திலும் இறங்கிவிட்டார். வீதியின் இருபுறமும் தனது தொண்டர்கள்(?) மனித சங்கிலி போல கை கோத்து நிற்க, நாங்குநேரி வீதிகளில் ஹெல்மெட்டும் கையுமாக (அதுதான் சின்னமாம்) ஓட்டுக்கேட்டுக் கொண்டிருந்தவரை பேட்டிக்காகப் பிடித்தேன்.

நீங்க ஒரு பன்மொழி வித்தகர்னு சொல்றாங்களே உண்மையா?

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE