கல்யாண வீட்டுக்கு ஹார்ட்டின் இட்லி!- - களைகட்டும் ஈரோடு இட்லிக் கடைவீதி

By காமதேனு

ரோகிணி
readers@kamadenu.in

‘ஒரு ரூபாய் இட்லி பாட்டி’ என்று வலைதளங்களில் வைரலான வடிவேலாம்பாளையம் கமலாத்தா போல, ஈரோடு கருங்கல்பாளையத்தின் இட்லி சந்தையும் இணையத்தில் இப்போது வைரல்!

‘இங்கே தட்டு இட்லி, மினி இட்லி, ஹார்ட்டின் இட்லி எனப் பல்வேறு வடிவ இட்லிகள் கிடைக்கின்றன. ஈரோடு, கோவை, திருப்பூர் என வெளியூர்களுக்கும் இட்லி பார்சலாகிறது’ என்றெல்லாம் பலரும் ‘சுவையான’ பதிவுகளை எழுதிவருகிறார்கள். ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களே இங்கு பெரும்பாலான கடைகளை நடத்துகிறார்கள் என்பது கூடுதல் விசேஷம்.

கருங்கல்பாளையத்துக்குள் நுழைந்து ‘இட்லி கடைவீதி…’ என்று கேட்டால் சின்னக் குழந்தையும் வழி சொல்லிவிடுகிறது. அந்த அளவுக்கு பேரு பெற்றிருக்கிறது இந்த உணவுச் சந்தை. சாலையோரமாகவே வரிசைகட்டி கடைகள். ஒவ்வொரு கடையிலும் மரத்தூள் விறகு அடுப்புகள். அவற்றின் மேல் பெரிய அளவிலான பெரிய இட்லி சட்டிகள். ஒரு கடையில், டேபிளில் துணி விரித்து, ஆவி பறக்கும் இட்லிகளை அதில் கொட்டிக் கொண்டிருந்தனர் சிலர். இன்னும் சிலர் அவற்றை சுடச்சுட ஹாட் பாக்ஸுக்குள் திணித்துக் கொண்டிருந்தார்கள்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE