ஐநா சபைக்கே போயிட்டு வந்துட்டா!- பிரேமலதாவைக் கொண்டாடும் கார்சேரி

By காமதேனு

கே.சோபியா
readers@kamadenu.in

மதுரை மாவட்டத்தில் உள்ள ஒரு குக்கிராமம் கார்சேரி. இங்கே ஒடுக்கப்பட்ட சமூகத்தில் பிறந்து அரசுப் பள்ளியில் படித்த மாணவி பிரேமலதா, ஐநா சபையில் உரையாற்றியிருப்பதன் மூலம் தமிழகத்துக்கு மட்டுமல்ல, மனித உரிமைக்காக உழைக்கும் ஒவ்வொருவருக்கும் பெருமை சேர்த்திருக்கிறார்.

மதுரையிலிருந்து 16 கிலோமீட்டர் தூரத்தில்தான் கார்சேரி இருக்கிறது என்றாலும், சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகளைப் பொறுத்தவரையில் மதுரையைவிட பல ஆண்டுகள் பின்தங்கிக் கிடக்கிறது. மினி பஸ்களும், ஷேர் ஆட்டோக்களுமே அதிக அளவில் ஓடுகிற அந்த ஒற்றைச் சாலை வழியாகச் சென்ற நம்மை ஊர் எல்லையிலேயே வரவேற்று வீட்டுக்கு அழைத்துப் போனார் பிரேமலதாவின் தாத்தா சுப்பையா. ஊருக்கு ஒதுக்குப்புறமாக ஆட்டுத்தொழுவத்துடன் கூடிய அந்த கான்கிரீட் வீட்டில்தான் வசிக்கிறார் பிரேமலதா.

“இப்பதான் எஃப்எம் ரேடியோக்காக ரெக்கார்டிங் முடிச்சிட்டு வந்தேன். கொஞ்சம் வெயிட் பண்ணுங்க அண்ணா” என்றார் பிரேமலதா. அந்த இடைவெளியில், பிரேமலதாவின் ஐநா பயணத்திற்கு உதவிய மக்கள் கண்காணிப்பகம் அலுவலகத்தைச் சேர்ந்தவர்களிடம் பேசினோம்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE