பிரேமா நாராயணன்
premaa.narayanan@gmail.com
ராமாயணம்...
பாரதத்தின் மாபெரும் இரு இதிகாசங்களுள் ஒன்று. ராமாயணத்தைப் படித்தாலும் கேட்டாலும் சுபிட்சம் நிச்சயம் என்பது ஆன்மிகத்தில் நாட்டம் கொண்ட அனைவரின் அசைக்க முடியாத நம்பிக்கை. ‘மக்களுக்கு தருமத்தையும் நீதியையும் புகட்டும் முதற்காவியம்’ என்று காஞ்சி முனி மகா பெரியவரால் புகழப்பட்டது ராமாயணம். மனிதன் ஒழுக்கசீலனாக, அறம் வழுவாத கர்ம வீரனாக இருந்தால் மட்டும் போதும் என்கிற உண்மையை அழகாகவும் எளிமையாகவும் சொன்ன இனிய இதிகாசம் இது.
‘அதெல்லாம் சரி. இந்த டிஜிட்டல் யுகத்துல யார் ராமாயணமெல்லாம் படிக்கிறாங்க?’ என்றுதானே கேட்கிறீர்கள்...