பாஜகவுடன் கூட்டணி இல்லை!- ஒதுங்கும் ரஜினி நெருங்கும் தினகரன்

By காமதேனு

குள.சண்முகசுந்தரம்
shanmugasundaram.kl@kamadenu.in

ரஜினி அரசியல் பிரவேசம் அன்றாட நகைச்சுவையாகிவிட்ட நிலையில், அண்மையில் ரஜினியிடமிருந்து வந்த எதிர்மறை ரியாக்‌ஷன் பாஜக தலைமையை மாற்றி யோசிக்க வைத்திருக்கிறது.

“எனது அரசியல் ஆன்மிக அரசியல்” என்று ரஜினி அறிவித்தது முதலே அவர் மீது காவி முத்திரை குத்தப்பட்டு வருகிறது. அதற்கேற்ப அவரது அறிக்கைகளும் பேச்சுகளும் பாஜகவினர் கொண்டாடும் விதமாகவே இருந்து வருகிறது. ரஜினியின் இந்தப் போக்கும் பேச்சும் அவரை தமிழக பாஜக தலைவர், முதல்வர் வேட்பாளர் என்ற அளவுக்கு தமிழக அரசியல் களத்தில் செய்திகளை சிறகடிக்க வைத்தன.

இதுவரை தன்னை வைத்து கிளம்பும் அரசியல் ஹாஸ்யங்களைப் பற்றி கவலைப்படாமல் இருந்த ரஜினி, ‘பாஜக தலைவராகிறார் ரஜினி’ என்ற செய்தியால் ரொம்பவே கவலைப்பட்டுப் போனார் என்கிறார்கள். தங்களை அவர்கள் பக்கம் இழுப்பதற்காக பாஜகவே இதுபோன்ற செய்திகளைப் பரப்புகிறதோ என்ற சந்தேகம்கூட ரஜினி தரப்புக்கு எழுந்ததாகச் சொல்கிறார்கள். இதுபற்றி ரஜினி வட்டாரத்து விவகாரங்களை அறிந்த பத்திரிகையாளர் ஒருவர் நம்மிடம் பேசுகையில், “ரஜினியை வைத்து தமிழ
கத்தில் தங்களுக்கான வலுவான அடித்தளத்தைக் கட்டமைக்க பாஜக கனவு காண்பது உண்மைதான். ஆனால், தனது அரசியல் ஆன்மிக அரசியல் என்று சொன்னாலும் பாஜகவுடன் கைகோக்க ரஜினி தயாராய் இல்லை. ஆன்மிக அரசியல் என்று சொல்லி விட்டாலும் பெரியார் வலியுறுத்திய சமூக நீதி, பெண்ணுரிமை இவைகளை முன்னிறுத்தி தனது அரசியல் பிரவேசத்தை தொடங்க நினைக்கிறார் ரஜினி. அதனால் எடுத்த எடுப்பிலேயே அவர் பாஜகவுடன் கைகோக்க மாட்டார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE