கடிதங்களே நேசம்... புத்தகங்களே சுவாசம்!- எழுத்தைக் கொண்டாடும் பொன்.குமார்

By காமதேனு

கா.சு.வேலாயுதன்
velayuthan.kasu@kamadenu.in

சேலத்தில் வசிக்கும் எழுத்தாளர்கள் பற்றிய தகவலைக் கேட்டால், முகவரி முதற்கொண்டு முழு விவரங்களையும் மூச்சு
விடாமல் சொல்கிறார் பொன்.குமார். வாசகர் கடிதங்களால் சக வாசகர்களிடம் நன்கு அறிமுகமான இவர், இலக்கிய ஆளுமை
களுடன் கடிதத் தொடர்பை வளர்த்துக்கொண்ட தீவிர வாசகர். எல்லாவற்றுக்கும் மேல், 19 நூல்களையும் எழுதியிருக்கும் எழுத்தாளரும்கூட.

சேலம் லைன்மேடு பகுதியில் அந்த சின்ன கம்பிக் கதவு போட்ட பொன்.குமாரின் வீட்டிற்குள் நுழைந்தால், அதில் பத்தடிக்குப் பத்தடி உள்ள ஓர் அறை முழுவதும் புத்தகங்கள். ஆயிரக்கணக்கான அஞ்சலட்டைகள். 1990-ல், தொடங்கி இன்று வரை திகசி, வல்லிக்கண்ணன் உள்ளிட்ட ஏராளமான எழுத்தாளர் களிடமிருந்து வந்த அஞ்சலட்டை, இன்லேண்ட், கடித உறைகளையெல்லாம் பத்திரப்படுத்தி வைத்திருக்கிறார்.

“இது சுந்தரராமசாமி, இது கலாப்ரியா, இது குரு ராதாகிருஷ்ணன்…” என்று வரிசையாக எல்லா கடிதங்களையும் காட்டும் பொன்.குமார், பழுப்பேறிய ஒரு கடிதத்தைக் காட்டி, “இது எனக்கு திகசி கடைசியா எழுதினது. அடுத்த வாரம் என்னைச் சந்திக்கிறதா சொல்லியிருந்தார். அதுக்குள்ள அவர் காலமான செய்திதான் கிடைச்சுது” என்கிறார் வருத்தம் தொனிக்க.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE