உ.சந்தானலெட்சுமி
santhanalakshmi.u@hindutamil.co.in
பக்கத்துத் தெருவுக்குப் போவதற்குக்கூட, கூகுள் மேப்பை நாடும், நவயுக மனிதர்களுக்கு மத்தியில், கேமரா ஒன்றே துணை என்று புதுப் புது இடங்களுக்குச் சென்று புகைப்படங்கள் எடுத்துத்தள்ளுகிறார் பயணப் புகைப்படக் கலைஞரான சாய் பிரியா. கரையில் நிற்கும் வரைதான் ஆழ்கடல் அச்சம்; மூழ்கி முத்தெடுக்க முடிவெடுத்துவிட்டால் நீச்சலும் பழகிவிடும் என தைரியத்தின் மொத்த உருவமாய் இருக்கிறார் இவர்.
அம்பத்தூரில் வசிக்கும் சாய் பிரியாவைச் சந்திக்கச் சென்றிருந்தேன். வீட்டு வரவேற்பறையைப் புகைப்படங்களும் விருதுகளும் அலங்கரித்தன. “இதெல்லாம் பழைய படங்கள். புதுசா எடுத்த படங்களை இனிமேல்தான் ஃப்ரேம் செய்யணும்” என்று புன்னகைத்தபடி வரவேற்கிறார் சாய் பிரியா.
“இந்தத் துறையில உங்களுக்கு ஆர்வம் வந்தது எப்போ?” என்று கேட்டால், படபடவென்று தன் புகைப்படப் பயணத்தைப் பற்றிச் சொல்லத் தொடங்குகிறார்.