லதா ரகுநாதன்
lrassociates@gmail.com
அந்தக் காலத்து ‘ரோட்டரி டயல்’ தொலைபேசிகளை நம்மில் பலரும் மறந்திருக்க மாட்டோம். கறுப்பு நிறத்தில், ‘ட்ரிங்… ட்ரிங்…’ என்று சிணுங்கிக்கொண்டு, தலைமுறைகளைத் தாண்டி, பல ஆண்டுகளுக்கு பயன்பாட்டில் இருந்தவை அவை. ஆனால், இன்றைக்கு ஒரு ஸ்மார்ட்போனை ஆறு மாதங்களுக்குப் பயன்படுத்தினாலே, அதை ‘அரதப் பழசு’ என்று சொல்லி, லேட்டஸ்ட் மாடலை வாங்கத் தலைப்படுகிறோம். சரி, பழைய ஸ்மார்ட்போனை என்ன செய்வது?
எக்ஸ்சேஞ்ச் ஆஃபரில் பழைய போனைத் தள்ளிவிடலாம் என்றால், பிசாத்துத் தொகைக்குத்தான் கேட்பார்கள். எனவே, பலரும் எக்ஸ்சேஞ்ச் ஆஃபர் பக்கம் போகாமல், பழைய ஸ்மார்ட்போனை மனைவிக்கோ, அம்மாவுக்கோ ‘அன்பளிப்’பாக வழங்கிவிடுவார்கள். ‘பழையன கழிதலும்…’ என்று பழகிவிட்ட நம் சமூகத்தில், பழைய ஸ்மார்ட்போன்கள் பெரும்பாலும் பரணுக்குப் போய்விடும். அப்படிக் கிடப்பில் போடப்படும் பழைய ஸ்மார்ட்போன்களை வைத்து, நம் வீட்டின் டிவி முதல் ஏ.சி வரை எல்லா சாதனங்களுக்குமான ஒரே ரிமோட் கன்ட்ரோலாகப் பயன்படுத்தலாம். கண்காணிப்புக் கேமராவாகக்கூட பயன்படுத்த முடியும்.
எல்லாம் செயலியின் செயல்