கா.சு.வேலாயுதன்
velayuthan.kasu@kamadenu.in
ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் காந்திக்கு முதன்முதலாகக் கோயில் கட்டப்பட்டிருக்கிறது என்று செய்திகள் வருகின்றன. இல்லையில்லை, தெலங்கானாவின் நளகொண்டா மாவட்டத்தில் உள்ள பேடகபர்த்தியில், 2014-லேயே காந்தி கோயில் கட்டப்பட்டுவிட்டது என்கிறது இன்னொரு செய்தி. உண்மையில், காந்தியின் முதல் ஆலயம் அமைந்தது தமிழகத்தில்தான்.
1997-ல், ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி, செந்தாம்பாளையத்தில் காந்திக்கு முதன்முதலாகக் கோயில் எழுப்பப்பட்டது. காந்தி 150 கொண்டாட்டங்களை எட்டியிருக்கும் இவ்வேளையில், அந்தக் கோயில் எப்படி இருக்கிறது என்று அறிந்துகொள்ள அங்கு சென்றிருந்தேன்.
பவானி வாய்க்கால் ஓரம், செந்தாம்பாளையம் முகப்பில் 300 ஆண்டுகள் பழமையான மாரியம்மன் கோயில். அதன் எதிரே அமைந்திருக்கிறது காந்தி கோயில். நான் சென்றபோது கோயிலைப் பூட்டிக்கொண்டிருந்தார் உதவி குருக்கள் சங்கரன்.