ஓபிஎஸ்ஸை ஓரங்கட்டுகிறாரா ஈபிஎஸ்- ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் குமார்

By காமதேனு

கே.கே.மகேஷ்
magesh.kk@kamadenu.in

தேனி மக்களவைத் தொகுதியில் வென்று அதிமுக – பாஜக கூட்டணியின் ஒற்றை எம்பி-யாக நாடாளுமன்றம் சென்ற ஓ.பி.ரவீந்திரநாத் குமார், ஒரு சுற்று நன்றியறிவிப்பை முடித்த கையோடு, பெரியகுளத்தில் தனது தந்தையின் டீக்கடை அருகே தனது அலுவலகத்தைத் திறந்திருக்கிறார். தொகுதி மக்கள் தன்னை 24 மணி நேரமும் தொடர்பு கொள்வதற்கான செல்போன் செயலியையும் அறிமுகப்படுத்தினார். நிகழ்ச்சி முடிந்ததும் அவரைச் சந்திப்பதற்காக வடக்கு அக்ரஹாரம் தெருவில் உள்ள அவரது வீட்டிற்குச் சென்றோம். உள்ளே ஆட்கள் போய்க்கொண்டே இருக்க, மூட்டை மூட்டையாக சால்வைகளும் துண்டுகளும் வெளியே வந்துகொண்டே இருந்தன. மாலை 4 மணிக்கு அவரைப் பேட்டிக்காகப் பிடித்தோம். “காலைல 4 மணிக்கு எந்திரிச்சது... அதான் டயர்டா இருக்கு. இன்னும் சாப்டக்கூட இல்ல” என்றவர், “சரி, உங்க பேட்டிய முடிச்சுட்டே போறேன். ஆனா ஒரு நிபந்தனை. போட்டோ மட்டும் நான் ஃரெப்ரஸ் ஆனதும் எடுங்க” என்றபோது, எண்பதுகளின் குழந்தையாக மாறியிருந்தார். இனி அவரது பேட்டி...

எதிர்க்கட்சி எம்பி-க்கள் 38 பேருக்கு மத்தியில் ஒற்றை ஆளாக நாடாளுமன்றம் சென்று வந்த அனுபவம் எப்படி இருந்தது?

தனியாளாகத்தான் போனேன். தமிழ்நாட்டில் இருந்து பாஜக கூட்டணியில் வென்ற ஒரே எம்பி என்றதும் நிறைய வடநாட்டு உறுப்பினர்கள் தேடிவந்து வாழ்த்துச் சொன்னார்கள். பதவியேற்பின்போது ‘ஜெய்ஹிந்த்’ என்று முழங்கியதைப்  பலரும்
பாராட்டினார்கள். நானும், தமிழகத்திலிருந்து வந்திருக்கும் மற்ற எம்பி-க்களும் அவைக்குள் எதிரெதிர் நிலைப்பாட்டில் பேசினாலும், அவர்களையும் நான் நண்பர்களாகத்தான் பார்க்கிறேன். மக்கள் பணிக்காகத்தான் எல்லோரும் இந்தக் கட்டிடத்திற்குள் வந்திருக்கிறோம் என்ற உணர்வு எனக்கிருந்தது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE