லதா ரகுநாதன்
lrassociates@gmail.com
நமது உடல் ஆரோக்கியத்தைக் கண்காணிக்கும் சாதனங்கள், முன்பெல்லாம் மருத்துவமனைகளில் மட்டுமே கிடைக்கும். இப்போதோ, ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு போன்றவற்றைச் சொல்லும் கையடக்க சாதனங்கள் வீட்டுக்குள்ளேயே வந்துவிட்டன. சரி, ரத்த அழுத்தம், சர்க்கரை போன்றவற்றைக் கணக்கிட இதுமாதிரியான கையடக்க சாதனங்கள் இருப்பதுபோல், வீட்டிலிருந்தபடியே நமது இதயத் துடிப்பைக் கண்காணிக்க சாதனங்கள் ஏதும் உண்டா?
உண்டு. கைக்கடிகாரத்தின் வடிவில் உருவாக்கப்பட்டுள்ள இந்தச் சாதனங்கள் ‘ஃபிட்னஸ் பேண்டு’கள் (Fitness Bands) என்று அழைக்கப்படுகின்றன. பல்வேறு நிறுவனங்கள் இந்த ஃபிட்னஸ் பேண்டுகளைத் தயாரித்திருக்கின்றன. ஆப்பிள் நிறுவனத் தயாரிப்பான ‘ஆப்பிள் வாட்ச் சீரிஸ் – 4’ (Apple watch series 4), இதில் இன்னும் ஒருபடி மேலே சென்று துல்லியம் காட்டுகிறது. இதில் இருக்கும் இசிஜி செயலி (ECG app) இதைச் சாத்தியமாக்குகிறது. கடந்த செப்டம்பரில் அமெரிக்காவில் அறிமுகம் செய்யப்பட்ட இந்த வாட்ச், மார்ச்சில் 19 ஐரோப்பிய நாடுகளில் புழக்கத்துக்கு வந்துவிட்டது.
இதன் சிறப்பம்சம் என்ன?