ஆயிரங்கால் மண்டபத்தில் ஆகம விதிமீறலா?- ஆடம்பர திருமண சர்ச்சையில் தில்லை நடராஜர் ஆலயம்!

By காமதேனு

கரு.முத்து
muthu.k@kamadenu.in

சைவர்களின் கோயில் என்று போற்றப்படும் சிதம்பரம் நடராஜர் ஆலயம், சமீப காலமாகவே தேவையற்ற சர்ச்சைகளில் அடிபடுகிறது. அந்த வகையில் இப்போது, ஆகம விதிகளை மீறி ஆயிரங்கால் மண்டபத்தில் ஆடம்பரத் திருமணம் நடத்த அனுமதி அளித்ததாக வெளியாகியிருக்கும் தகவல்கள், நடராஜர் பக்தர்களை வேதனையில் ஆழ்த்தியிருக்கின்றன.

நடராஜர் ஆலயத்தில் வடகிழக்கில் இருக்கும் பிரம்மாண்டமான ஆயிரங்கால் மண்டபம் மிகவும் கீர்த்தி வாய்ந்தது. அங்கு நடராஜரே ஆண்டுக்கு இரண்டு முறைதான் எழுந்தருள்வார். ஆனி மாத திருமஞ்சனம், மார்கழி மாத ஆருத்ரா தரிசனம் ஆகிய நாட்களில் மட்டும் சிவகாமி சமேதராக நடராஜர் இங்கே எழுந்தருள்வார். அவருக்கு லட்சார்ச்சனை, மகா தீபம், சொர்ணாபிஷேகம் ஆகியவை அங்கே நடைபெறும். அங்கிருந்துதான் தேருக்கு எழுந்தருள்வார் நடராஜர். இது தவிர அந்த மண்டபத்தில் வேறெதெற்கும் வேலையில்லை என்பதால், மண்டபம் பூட்டிப் பாதுகாக்கப்படும்.

அதேசமயம், சோழ மன்னர்களுடைய வரலாற்றில் இந்த மண்டபத்துக்கு முக்கிய இடமுண்டு. சோழ மன்னர்கள் பலரின் முடிசூட்டு விழா இங்குதான் நடைபெற்றிருக்கிறது. பின்னாளில் இப்பகுதியைக் கைப்பற்றிய களப்பிரர் வம்சத்தைச் சேர்ந்த கூற்றுவநாயனார் என்ற மன்னர் தனது முடிசூட்டு விழாவை இங்கே நடத்த விரும்பி தில்லைவாழ் அந்தணர்களை அணுகினார். ஆனால், ‘சோழர் குல முதல்வர்க்கன்றி சூட்டோம் முடி’ என்று அவருக்கு அனுமதி மறுத்துவிட்டார்கள் என்கிறது ‘பெரியபுராணம்’.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE