சிகரம் தொட்ட சிவன்

By காமதேனு

தொகுப்பு: தேவா

கடந்த வார ஹீரோ சந்தேகமே இல்லாமல் இஸ்ரோ தலைவர் சிவன்தான். சந்திரயான் லேண்டர் திடீரென்று சிக்னல் இழந்ததும், சிவன் உடைந்துபோனார். அவரைப் பிரதமர் மோடி தேற்ற அந்த வீடியோவைப் பார்த்து நாடே உருகியது. சொல்லப் போனால் சந்திரயான் லேண்டரை விடவும் இஸ்ரோ சிவனுக்காகத்தான் இந்தியாவே உருகியது. இணையத்தில் இஸ்ரோ சிவன் குறித்த பல தகவல்கள் பகிரப்பட்டன. பெரும்பாலானோர் சிவன் எங்களுக்குப் பெரிய இன்ஸ்பிரேஷன் என்று நெகிழ்ந்தனர். நல்ல விஷயம்தான். ஆனால் உண்மையிலேயே எத்தனை பேர் அவரால் இன்ஸ்பயர் ஆயிருப்பார்கள் என்றால் அதற்கு யாரிடமும் பதிலிருக்காது.

ஸ்டாலினுக்கு வெள்ளையறிக்கை அல்ல... வெள்ளரிக்காய்தான் கொடுப்போம்.  - ராஜேந்திர பாலாஜி#
இவரை அமைச்சருன்னுல்ல நினைச்சேன். கடைசில பார்த்தால் வெள்ளரிக்காய் வியாபாரிதானா? - அணில்

பொருளாதாரத்தில் ஒரு குவாட்டரை இன்னோரு குவாட்டரோட ஒப்பிடும்போது வித்தியாசம் இருக்கும். - எச்.ராஜா
இதனால ‘கட்டிங்’குக்கு எதுவும் பிரச்சினை இல்லையே? - கலீல்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE