வெ.சந்திரமோகன்
chandramohan.v@hindutamil.co.in
தெலங்கானாவின் முதல் பெண் ஆளுநராகத் தமிழிசை சவுந்தரராஜன் பதவியேற்றிருக்கும் சூழலில், அம்மாநிலத்தில் தென்படத் தொடங்கியிருக்கும் மாற்றங்கள் புதிய அரசியல் சூழலுக்கு வழிவகுக்கும் என்று தெரிகிறது.
தமிழிசை பதவியேற்ற தினத்திலேயே முதல்வர் கே.சந்திரசேகர் ராவின் மகன் கே.டி.ராமராவ், மருமகன் ஹரீஷ் ராவ் உட்பட 6 அமைச்சர்கள் பதவியேற்றுக்கொண்டிருப்பது பலரைப் புருவமுயர்த்தச் செய்திருக்கிறது. டெங்கு மரணங்கள், யதாத்ரி கோயில் தூணில் முதல்வர் கே.சி.ஆரின் உருவம் பொறிக்கப்பட்டிருப்பது போன்றவை ஏற்கெனவே தெலங்கானாவில் புயலைக் கிளப்பியிருக்கின்றன. இவை எல்லாவற்றுக்கும் மேலாக, தமிழிசை ஆளுநராக பொறுப்பேற்பதை விமர்சித்து கேசிஆர் முகாமிலிருந்து வெளியான கட்டுரை ஒன்று பாஜகவுக்குக் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
அமைச்சரவை விரிவாக்கம்