நல்ல கதை  நீளமில்ல... நான் பட்ட கதை கொஞ்சமில்ல!- ஃபேன்ஸி ஸ்டோரிலிருந்து  ‘காப்பியத் தமிழன்’

By காமதேனு

என்.பாரதி
readers@kamadenu.in

மார்த்தாண்டத்தை அடுத்த வெட்டுமணி பகுதியின் சாலையோரத்தில் இருக்கிறது அந்தச் சிறிய ஃபேன்ஸி ஸ்டோர். வளையல்கள், பொம்மைகள் வண்ண வண்ணப் பொருட்கள் கண்ணைப் பறிக்கின்றன. அந்தக் கடையின் உரிமையாளர், ‘காப்பியத் தமிழன்’ என்ற பெயரில் கதைகள் எழுதிவரும் தோமஸ்.

வறுமையின் கொடுமை துரத்தியதால் தற்கொலைக்கு முயன்ற தோமஸ், அதிலிருந்து தன்னைக் காப்பாற்றிய வருக்கும் வாழ்வளித்து, சொந்த அனுபவங்களை எழுத்தாக்கிக் கொண்டிருப்பவர்.

நான் போன நேரம் சோவென மழை. கடையின் தகர மேற்கூரைக்கு இடையிலிருந்து தண்ணீர்  கடைக்குள் ஒழுகுகிறது. மழைத் தண்ணீரில் கடைப் பொருட்கள் நனைந்துவிடாமல் எடுத்துவைத்துக்கொண்டே தனது  கதையைச் சொல்லத் தொடங்குகிறார் தோமஸ்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE