வந்தேறிகள் ஆதிக்கத்தில் திமுக? - காளிமுத்து சொன்னதும்... கழகத்தில் நடப்பதும்

By காமதேனு

குள.சண்முகசுந்தரம்
shanmugasundaram.kl@kamadenu.in

“நாங்கள் கழட்டிப்போட்ட பழைய கோவணத் துணிகளை பட்டாடை என்று சொல்லி தலையில் சூடி அழகுபார்த்துக் கொண்டிருக்கிறார் கருணாநிதி” 1996-ல், அதிமுக மிக மோசமான தோல்வியைச் சந்தித்திருந்த நிலையில் அதிமுக முக்கியத் தலைகள் பலரும் திமுகவில் வந்தேறியதையும் அவர்களை திமுக ஆரத் தழுவி அரவணைத்துக் கொண்டதையும் இப்படித்தான் மேடை கண்ட இடமெல்லாம் வாங்கு வாங்கென்று வாங்கித் தள்ளினார் அதிமுக முன்னாள் அமைச்சர் காளிமுத்து.

இப்போது அதைப்பற்றி எல்லாம் பேச அதிமுகவுக்கு  நேரமும் இல்லை; அதற்கான ஆட்களும் அங்கு இல்லை. அதனால், வந்தேறிகளுக்கு  வளமான வாழ்வளிக்கும் திமுக தலைமையின் நடவடிக்கைகளைப் பரம்பரை திமுகவினரே நறுக் சுருக்கென விமர்சித்துக் கொண்டிருக்கிறார்கள்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு அமமுகவிலிருந்து அறிவாலய பிரவேசம் செய்த செந்தில்பாலாஜிக்கு மாவட்டப் பொறுப்பாளர் பதவி கொடுத்ததுடன் இடைத்தேர்தலில் நிற்கவைத்து எம்எல்ஏ-வும் ஆக்கியது திமுக தலைமை. அதற்கே பொருமிக்கொண்டிருந்த திமுககாரர்கள், அடுத்ததாக அண்மையில் கட்சியில் இணைந்த கலைராஜனை கலை இலக்கிய அணியின் இணைச் செயலாளராகவும் தங்கதமிழ்ச்செல்வனை கொள்கை பரப்புச் செயலாளராகவும் அமர்த்தியதில் அதிருப்தியின் உச்சத்தில் இருக்கிறார்கள்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE