நாங்கள் யாருக்கும் அடிமைகள் இல்லை!- அமைச்சர் எஸ்.பி.வேலுமணி விறுவிறு பேட்டி

By காமதேனு

கா.சு.வேலாயுதன்
velayuthan.kasu@kamadenu.in

மழை நீர் சேகரிப்பு குறித்த விளம்பரத்தில் தோன்றி கருத்துச் சொன்ன உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, விளம்பரத்தில் பார்க்கும் அதே உற்சாகத்துடன் இருக்கிறார். முதல்வர் பழனிசாமியின் வலதுகரம்; ஓபிஎஸ் - ஈபிஎஸ் முரண்பாடுகள் டெல்லியின் காதுகளுக்குச் சென்றால் ஓடோடிச் சென்று விளக்கம் தருபவர் என்றெல்லாம் பேசப்படுபவர். ஆனாலும் பிரத்யேகப் பேட்டிகள் என்றாலே விலகி நிற்பவர். அப்படிப்பட்டவரை காமதேனு பேட்டிக்காக அணுகியபோது, “நான் அரசியல் பேட்டியே கொடுக்கறதில்லைண்ணா...” என்று தயங்கினார். தமிழக அரசின் செயல்பாடுகள் பற்றிய பேட்டி என்றதும் சந்தோஷமாகத் தயாரானார். 

சசிகலாவின் முதல்வர் சாய்ஸ் பட்டியலில் உங்கள் பெயர்தான் முதலில் இருந்தது, கட்சியிலும் ஆட்சியிலும் உங்கள் சொல்லுக்குப் பெரும் மதிப்பு இருக்கிறது என்றெல்லாம் பேசப்படுகிறது. ஏதேனும் ‘திட்டம்’ வைத்திருக்கிறீர்களா?

எடுத்த உடனேயே அதிரடியாக் கேட்கிறீர்களே! நீங்கள் குறிப்பிடுவதுபோல் எந்தத் திட்டமும் எனக்கு இல்லை. இனிமேலும் அப்படி ஒரு எண்ணம் வராது. எடப்பாடி அண்ணனுக்கும் ஓபிஎஸ் அண்ணனுக்கும் பக்கபலமாக நிற்கிறேன். அவ்வளவுதான்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE