வெளிநாட்டுல நிறைய சொத்து இருக்கு... எனக்கு இருக்குதா? - கலாய்க்கிறார் கார்த்தி சிதம்பரம்

By காமதேனு

கே.கே.மகேஷ்
magesh.kk@kamadenu.in

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டு இரண்டு வாரங்கள் ஆகின்றன. சீக்கிரமே ஏர்செல் மேக்ஸிஸ் வழக்கிலும் அவர் கைது செய்யப்படக்கூடும் என்கிறார்கள். ஐஎன்எக்ஸ் வழக்கில் ஓராண்டுக்கு முன்பே கைது செய்யப்பட்டு ஜாமீனில் இருக்கும் கார்த்தி சிதம்பரம், இப்போது தன் தந்தையை மீட்பதற்காக உச்ச நீதிமன்றத்தில் சட்டப்போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறார். பேட்டிக்காக 29-ம் தேதி அவரைத் தொடர்புகொண்டபோது, சுப்ரீம் கோர்ட்டில் இருந்தார். அவர் கேட்டுக்கொண்டதற்கிணங்க மாலையில் தொடர்பு கொண்டபோது,  “20 நிமிட பேட்டி என்றால் நீங்கள் நேரில்தான் வர வேண்டும். 5 நிமிடம் என்றால் போனில் பேசலாம். அதனால, உங்க கேள்விகளில் எது முக்கியம் என்று நினைக்கிறீர்களோ அதை மட்டும் கேளுங்க” என்றவர், 12 நிமிடம் சுவாரசியமாகப் பேசினார். இனி பேட்டி...

பாரம்பரியமான குடும்பத்தில் பிறந்த ப.சிதம்பரம், லஞ்ச ஊழல் வழக்குகளில் சிக்கக் கூடியவரில்லை. இப்போது அவர் இப்படியொரு சிக்கலில் மாட்டியதற்கு அவருடைய மகனான நீங்கள்தான் காரணம் என்கிறார்களே?

 சிக்கல் ஒன்றும் கிடையாதுங்க. இந்த அரசாங்கத்தை எதிர்த்து ஆழமான வாதங்களைப் பதிவு பண்ணியதால், இந்த அரசாங்கம் அவருக்கு ஒரு நெருக்கடியைக் கொடுக்க வேண்டும் என்று ஒரு வழக்கை ஜோடித்து கைது நடவடிக்கை எடுத்திருக்கிறார்கள். அவருக்கு மன அழுத்தம் கொடுக்க வேண்டும் என்பதற்காக என் மேல் சில வழக்குகளைப் போட்டு, 4 தடவை ரெய்டு நடத்தி, 20 தடவை சம்மன் அனுப்பி, அவரை கஸ்டடியில் எடுத்திருக்கிறார்கள். என்னால் அவருக்கு எந்தச் சிக்கலும் வரவில்லை. நான் எந்தப் பிரச்சினையிலும் சிக்கவும் இல்லை. இந்த அரசாங்கத்தை எதிர்த்து அவர் விமர்சனங்களை வைக்கக்கூடாது என்பதற்காக நடத்தப்படும் நாடகம் இது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE