இருக்கும்... ஆனா இருக்காது!- டெபிட் கார்டுக்கு முடிவுகட்டும் ‘யோனோ’

By காமதேனு

லதா ரகுநாதன்
lrassociates@gmail.com

ஒரு கற்பனைக் கதை. திடீரென உங்களுக்கு ‘டைம் மெஷின்’ கிடைக்கிறது. அதில் ஏறி 2024-ம் வருடத்துக்குச் சென்று இறங்குகிறீர்கள். உங்கள் ஏரியாவே கொஞ்சம் மாறியிருக்கும். புதிய கடைகளும் திறக்கப்பட்டிருக்கலாம். ‘அடடா, செலவுக்கு ரொக்கப் பணம் எடுத்துவராமல் விட்டுவிட்டோமே’ என்று டெபிட் கார்டுடன் ஏடிஎம்-க்குள் நுழைந்தால் ஏமாந்துதான் திரும்புவீர்கள். ஆம், இன்னும் ஐந்து ஆண்டுகளில் டெபிட் கார்டுகளே செல்லாத  நிலை வரலாம்.

“அடுத்த ஐந்து வருடங்களுக்குள் டெபிட் கார்டுகளின் பயன்பாடு கணிசமாகக் குறைந்துவிடும். குறைந்தபட்ச பயன்பாட்டுக்கு மட்டுமே அவை பயனாகும்” என்று அதிரடி அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார் பாரத ஸ்டேட் வங்கியின் (SBI) தலைவர் 
ரஜனீஷ் குமார்.

கிட்டத்தட்ட டெபிட் கார்டுகளே இல்லாத நிலை வரும் என்பதை வேறுவிதமாகச் சொல்கிறார். இந்தியாவின் மிகப் பெரிய வங்கியான எஸ்பிஐ வங்கியே இதை முன்னெடுத்திருக்கும்போது, இதர வங்கிகளும் இதைப் பின்பற்றி டெபிட் கார்டுகளுக்கு எண்ட் கார்டு போட வாய்ப்பு அதிகம் என்கிறார்கள் பொருளாதார நிபுணர்கள்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE