அடித்து விரட்டிய அதீத துணிவு- கொள்ளையரை மிரளவைத்த நெல்லைத் தம்பதி! 

By காமதேனு

என்.பாரதி
readers@kamadenu.in

அரிவாளோடு வீட்டுக்குள் புகுந்த கொள்ளையர்களைப் புரட்டியெடுத்து விரட்டியடித்த நெல்லை வீரத் தம்பதியர் வாழ்த்து மழையில் நனைந்து கொண்டிருக்கிறார்கள். சண்முகவேலு - செந்தாமரை  தம்பதியை பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் முதல் காவல் துறை அதிகாரி சைலேந்திர பாபு வரை கொண்டாடித் தீர்த்திருக்கிறார்கள். அத்துடன், முதல்வரின் கையால் இருவருக்கும் அதீத துணிவு விருதும் கிடைத்திருக்கிறது. அசாத்திய துணிச்சலால் அனைவரின் பாராட்டையும் பெற்றிருக்கும் இந்த மூத்த குடிமக்களைச் சந்திக்க நெல்லை மாவட்டம், கடையத்துக்குப் பயணப்பட்டேன்.

கடையத்தின் புறநகர்ப் பகுதியில் இருக்கிறது சண்முகவேலுவின் பண்ணை வீடு. மூன்றரை ஏக்கர் பரப்பில் விரியும் பண்ணையில் எலுமிச்சை காய்த்துக் குலுங்குகிறது. 

தென்னை, வாழை என்று பார்க்கும் இடமெல்லாம் பசுமை. நடுவில் அழகுடன் மிளிர்கிறது வீடு. வீட்டுக்குச் செல்லும் வழியிலேயே பாரம்பரியமான கூடாரமும் இருக்கிறது. ஜில்லென்று வீசும் தென்றலை அனுபவித்தபடி அந்தக் கூடாரத்தில் மிடுக்குடன் அமர்ந்திருக்
கிறார்கள் சண்முகவேலுவும் செந்தாமரையும்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE