ரஜினிக்கும் ராஜதந்திரம்!

By காமதேனு

தொகுப்பு: தேவா

ரஜினி இன்னும் நேரடி அரசியலுக்கு வராவிட்டாலும் தொடர்ந்து பாஜகவுக்கு ஆதரவான கருத்துகளை வெளியிட்டு சர்ச்சையில் சிக்கிக்கொள்கிறார். காஷ்மீர் விவகாரத்தை வைத்து அரசியல் செய்யக்கூடாது என்று கூறிவிட்டு,  ‘காஷ்மீர் விவகாரத்தை ராஜதந்திரத்துடன் கையாண்டிருக்கிறார்கள். அமித் ஷாவும் மோடியும் கிருஷ்ணரும் அர்ஜுனனும் போன்றவர்கள்’ என்று கூறி மறைமுகமாக அரசியல் செய்துகொண்டிருக்கிறார் என்று நெட்டிசன்கள் பலரும் விமர்சிக்கிறார்கள். தமிழ்நாட்டில் அநீதி நடக்கும்போதெல்லாம் அமைதியாகவே இருக்கும் ரஜினி, பாஜகவுக்கு ஆதரவாகப் பேச மட்டும் எங்கிருந்துதான் வருவாரோ தெரியவில்லை என்றும் விமர்சிக்கிறார்கள். சில நாட்கள் முன்புவரை, ‘நடிகர்களுக்கு என்ன தெரியும்?’ என்று கேட்ட தமிழிசை, ‘ரஜினியின் கருத்து தமிழக மக்களின் கருத்து’ என்று கூறியிருப்பதும் அதிகம் பகிரப்பட்டது. மோடியும் அமித் ஷாவும் ராஜதந்திரத்துடன் செயல்படுகிறார்களோ இல்லையோ ரஜினி ராஜதந்திரத்துடன் காய் நகர்த்துகிறார் என்கிறார்கள் அவரை விமர்சிப்பவர்கள்.

பிரசன்னா, ஸ்ரீகாந்த் ஆகியோருக்கு கலைமாமணி விருது.

இதுக்கு விஜய் டிவி குடுத்துக்கிட்டுருந்த விருதுகளே தேவலாம் போலையேடா..!- இட்லி

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE