குள.சண்முகசுந்தரம்
shanmugasundaram.kl@kamadenu.in
“என்னால ஜெயிலுக்குள்ள இருக்க முடியல... எப்படியாவது சீக்கிரம் என்னை வெளியில் எடுங்கள்!” அண்மையில் சிறையில் தன்னை சந்தித்த எடப்பாடியாரின் தூதுவரிடம் இப்படிக் கெஞ்சியது யாருமல்ல... சசிகலா நடராஜன்!
இதைக் கேட்டபோது கொஞ்சம் திகிலாகத்தான் இருந்தது. “ ஸ்ட்ராங் லேடினு சொல்லுவாங்களே... அந்த சசிகலாவா இப்படிக் கதறுகிறார்?” என்று எனக்குத் தகவல் சொன்ன அதிமுக மேல்மட்ட பொறுப்பாளரிடம் ஆச்சரியம் விலகாமல் கேட்டேன்.
பயத்தில் சசிகலா