வந்துவிட்டது ஸ்மார்ட் பில் பாக்ஸ்- நேரத்துக்கு மருந்து தரும் மருந்துப்பெட்டி

By காமதேனு

லதா ரகுநாதன்
lrassociates@gmail.com

நோயாளி: ஞாபக மறதி ரொம்ப அதிகமா இருக்குது டாக்டர்.
டாக்டர்: மருந்து கொடுத்திருக்கேனே… எடுத்துக்கிறீங்கதானே?
நோயாளி: அதைத்தான் டாக்டர் மறந்துட்டேன்.

ஞாபக மறதி தொடர்பான மருத்துவ ஜோக்குகளில் மிகப் பிரபலமானது இது. நடைமுறையிலும் இப்படி நடப்பதைப் பார்த்திருக்கிறோம். பரபரப்பான அவசர வாழ்க்கை முறை முதலில் நம் உடல் நலனைப் பாதிக்கத் தொடங்குகிறது. அதற்காக எடுத்துக்கொள்ளத் தொடங்கும் மருந்துகளில் சில ஒரு கட்டத்தில் ஞாபக மறதியில் கொண்டுவிடுகின்றன. வயோதிகமும் ஞாபக மறதிக்குப் பெரும் காரணமாக ஆகிவிடுகிறது. குறிப்பிட்ட நேரத்தில் மருந்து எடுத்துக்கொள்ளத் தவறிவிடுகிறோம். விளைவாக, உடல் நலன் இன்னும் பாதிக்கப்படுகிறது. ஒரு சங்கிலித் தொடர் சங்கடம் இது!

சில மருந்துகளைச் சரியான நேரத்தில், சரியான அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும். மறதியின் காரணமாக, மருந்து எடுத்துக்
கொண்டோமா இல்லையா எனச் சந்தேகித்து ‘எதற்கும் இன்னொன்றைப் போட்டுக்கொள்வோம்’ என்று மருந்தைக் கூடுதலாக உட்கொண்டால் அது ஓவர்டோஸ் ஆகிவிடும். அதனால் சில சமயங்களில் விபரீதமும் நடக்கலாம்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE