முடிவுக்கு வந்த 370 - காஷ்மீரின் கதி என்ன?

By காமதேனு

வெ.சந்திரமோகன்
chandramohan.v@hindutamil.co.in

காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து அளித்துவந்த 370-வது சட்டக்கூறு நீக்கப்பட்டிருக்கிறது. கூடவே, காஷ்மீரின் நிரந்தரக் குடிமக்கள் யார் என்று நிர்ணயிக்கும் சட்டக்கூறு 35-A–வுக்கும் முடிவு வந்துவிட்டது. காஷ்மீர் மாநிலம் இரண்டு யூனியன் பிரதேசங்களாகிவிட்டது. பாஜகவின் கனவுகளில் ஒன்றாக இருந்த இந்த நடவடிக்கை, எதிர்க்கட்சிகளின் பலவீனமான எதிர்ப்புக்கு இடையே மின்னல் வேகத்தில் நிறைவேறியிருக்கிறது. என்ன நடக்கிறது என்று புரிந்துகொள்வதற்குள் எல்லாமே முடிந்துவிட்டது. என்ன நடந்தது? என்ன நடக்கப்போகிறது காஷ்மீரில்?

காஷ்மீரின் கதை

காஷ்மீரின் அறியப்பட்ட வரலாறு அக்பரில் தொடங்குகிறது. 1586-ல், அக்பரின் படைகள் நுழைந்து, அதுவரை ஆண்டுவந்த முஸ்லிம் மன்னர் யூசுஃப் ஷா சக்கைக் கைது செய்தன. முகலாய ஆட்சி தொடங்கியது. 18-ம் நூற்றாண்டில் காஷ்மீர், ஆப்கானியர்கள் வசமானது. 1819-ல், சீக்கியர்கள் அதைக் கைப்பற்றினர். பிரிட்டிஷாருடன் மோதிவந்த சீக்கியர்கள் அவர்களுடன் ஒரு ஒப்பந்தத்தைப் போட்டு ஒதுங்கிக்கொண்டனர். 1846-ல், டோக்ரா இனத்தைச் சேர்ந்த குலாப் சிங் வசம் காஷ்மீர் சென்றது.
அதன் பின்னே, காஷ்மீரையும் ஜம்முவையும் கூடவே லடாக்கையும் இணைத்தார்கள் டோக்ரா அரசர்கள். முஸ்லிம்கள், இந்துக்களுடன் கிறிஸ்தவர்கள், பவுத்தர்கள் எனப் பலதரப்பட்ட மக்களும் ஒன்றிணைக்கப்பட்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE