ஹாட்லீக்ஸ்: தலைவருக்கு ஃப்ரெண்டுல்ல..!

By காமதேனு

தலைவருக்கு ஃப்ரெண்டுல்ல..!

வேலூர் தொகுதியில் ஏ.சி.சண்முகத்தை ஜெயிக்க வைப்பதற்காக ரஜினி ரசிகர்களும் களமிறங்கி இருக்கிறார்கள். கேட்டால், “தலைமையிடத்து உத்தரவுங்கோ” என்கிறார்கள். அடையாளம் காட்டிக் கொள்ளாமல் சண்முகத்தின் வெற்றிக்காக களப்பணி செய்யும்படி சொல்லி இருக்கிறாராம் சூப்பர் ஸ்டார். இதையடுத்து ரஜினி ரசிகர்கள் வீட்டுக்கு வீடு திண்ணைப் பிரச்சாரத்தில் இறங்கி
யிருக்கிறார்கள். “தலைவரோடு மிக நெருக்கமாக இருப்பவர் ஏ.சி.சண்முகம். அவர்ஜெயித்தால் நிச்சயம் மத்திய அமைச்சரவை
யில் இடம் கிடைக்கும். அதை வைத்து எங்கள் தலைவரும் தனது அரசியல் பயணத்தை வெற்றிகரமாகக் கட்டமைத்துக் கொள்வார். அதனால்தான் ஆர்ப்பாட்டம் இல்லாமல் சண்முகத்துக்காகக் களத்துல இறங்கியிருக்கோம்” என்று காதைக் கடிக்கிறார்கள் ரஜினி மன்றத்துப் பிள்ளைகள்.

கொலையிலும் கோஷ்டிகளை இழுக்குறாங்க!

நெல்லையின் முன்னாள் மேயர் உமாமகேஸ்வரி கொலை வழக்கில் திமுக முன்னாள் கவுன்சிலர் சீனியம்மாளின் மகன் கார்த்திகேயன் கைது செய்யப்பட்டார். இதில், உமா மகேஸ்வரி, கருப்பசாமி பாண்டியனின் ஆதரவாளர். சீனியம்மாள், ஆவுடையப்பன் ஆதரவாளர். ஏற்கெனவே நெல்லை மாவட்டத்தில் கருப்பசாமி பாண்டியனும், ஆவுடையப்பனும் கோஷ்டி அரசியல் கொடி பிடித்து  நிற்கிறார்கள்.  இந்த  நிலையில், சீட்டுக்கு பணம் வாங்கிய விவகாரமே இந்தக் கொலையின் பிரதானமாகப் பேசப்படுவதால், ஆவுடையப்பனையும் கானாவையும் சிபிசிஐடி போலீஸார் விசாரணைக்கு அழைக்கலாம் என்கிறார்கள்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE