அடுத்த தலைவர் பிரியங்கா!- கம்பளம் விரிக்கும் காங்கிரஸ் தலைவர்கள்

By காமதேனு

வெ.சந்திரமோகன்
chandramohan.v@hindutamil.co.in

தேர்தல் தோல்வி தந்த அதிர்ச்சியில், காங்கிரஸ் கட்சித் தலைவர் பதவியிலிருந்து ராகுல் காந்தி விலகிவிட்ட நிலையில், பிரியங்கா காந்தியை அந்த இடத்துக்குக் கொண்டுவர வேண்டும் எனும் குரல்கள் எழத் தொடங்கியிருக்கின்றன. 

காங்கிரஸ் தேசியப் பொதுச் செயலாளராக இருக்கும் பிரியங்காவை கட்சித் தலைவராக்கினால்தான் கட்சிக்கு எதிர்காலம் என்று பேச்சு எழுந்திருக்கிறது. நட்வர் சிங், அபிஜீத் முகர்ஜி, சத்ருகன் சின்ஹா போன்ற மூத்த தலைவர்கள் இதை முன்மொழிந் திருக்கிறார்கள். திடீரென்று பிரியங்கா பேசு பொருளாகியிருக்கும் பின்னணி என்ன?

உத்தர பிரதேசத்தின் சோன்பத்ரா பகுதியில் பத்துக்கும் மேற்பட்ட பழங்குடியினர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து டெல்லியிலிருந்து அங்கு பறந்து சென்றார் பிரியங்கா. மாயாவதி, அகிலேஷ் யாதவ் போன்ற தலைவர்கள் பல்வேறு அரசியல் காரணங்களுக்காக விலகி நிற்க, அந்த இடத்தில் பிரியங்கா வந்தமர்ந்தார். விவகாரம் சூடு பிடித்தது. யோகி ஆதித்யநாத் அரசு பல்வேறு குடைச்சல்கள் கொடுத்தபோதும் பின்வாங்காமல் பிடிவாதமாக அங்கேயே தங்கிய பிரியங்கா, பாதிக்கப்பட்டவர்களைச் சந்தித்ததுடன் குற்றவாளிகள் கைது செய்யப்படும்வரை போராட்டத்தைத் தொடர்ந்தார். சோர்ந்து கிடந்த காங்கிரஸ்காரர்களை அவரது அதிரடிச் செயல்பாடு தட்டியெழுப்பியிருக்கிறது. இதன் தொடர்ச்சியாகத்தான், அவரைக் கட்சித் தலைவராக்குவது தொடர்பான பேச்சுகள் எழுந்திருக்கின்றன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE