தொகுப்பு: தேவா
இந்திய அளவில் மோடிக்கு நிகராக கவனம் ஈர்க்கும் அரசியல் தலைவராக ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன்
ரெட்டி மாறிக்கொண்டிருக்கிறார். நாளுக்கு நாள் இணையத்தில் அவருக்கு ரசிகர்கள் கூடிக்கொண்டே போகிறார்கள். அதுவும் இளைஞர்கள் அவரைக் கொண்டாடுகிறார்கள். சந்திரபாபு நாயுடுவை வீழ்த்தி ஆட்சியைப் பிடித்த ஜெகனின் ஒவ்வொரு நடவடிக்கையும் ஒவ்வொரு அறிவிப்பும் இந்திய அளவில் பேசப்படுகிறது. ஆந்திர மக்களுக்கு முன்னுரிமை,
இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு, அரசு நடவடிக்கைகளில் மாற்றங்கள் என அதிரடி அறிவிப்புகளால் அரசியல்வாதி
களையெல்லாம் அலறவிடுகிறார். இவருடைய செயல்பாடு களுக்குப் பல்வேறு பிரபலங்களும் ஆதரவான கருத்துகளைத் தெரிவித்துள்ளனர். நெட்டிசன்கள் ஜெகன் மோகனை ஆந்திராவின் பாகுபலி என்று கொண்டாடுகின்றனர். ஆரம் பம் அதிரடியாக இருந்தாலும் போகப் போகத்தான் ஜெகன் மோகன் ரெட்டி எப்படியான ‘முதல்வர்’ என்பது தெரியும்.
தமிழகத்தில் நடக்கும் கொலை, கொள்ளைக்கும் அரசுக்கும் என்ன சம்பந்தம்? - திண்டுக்கல் சீனிவாசன்
அதானே, அரசு என்ன தமிழகத்திலா இயங்குது... டெல்லில இருந்துல இயங்குது...- கிப்சன்
சிலை கடத்தலில் இரண்டு தமிழக அமைச்சர்களுக்குத் தொடர்பு.
- பொன்.மாணிக்கவேல்
சாமி பேருக்கு அர்ச்சனை பண்ணச் சொல்லும்போதே தெரியும் இங்கதான் வந்து நிக்கும்னு!- ஷிவானி சிவக்குமார்